×

மணல் கடத்திய இருவர் கைது

வேப்பூர், மார்ச் 19: சிறுபாக்கம் அருகே குளவாய் கிராமம் மயூரா ஆற்றில் மணல் திருடுவதாக சிறுபாக்கம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி சிறுபாக்கம் காவல் உதவி ஆய்வாளர் இளங்கோவன், சிறப்பு உதவி ஆய்வாளர் தனசேகரன், தனிப்பிரிவு ஏட்டு மணிவண்ணன் ஆகியோர் கொண்ட குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு செய்தனர். அப்போது விழுப்புரம் மாவட்டம் ஓகையூரை சேர்ந்த சுரேஷ்(29), அதே பகுதியை சேர்ந்த நெப்போலியன்(26) ஆகியோர் டிராக்டர் டிப்பர் வாகனத்தில் மணல் கடத்தினர். இதையடுத்து இருவரையும் கைது செய்து, டிராக்டர் டிப்பர்களை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க அனைத்து வசதிகளும் தயார்கடலூர், மார்ச் 19: நாடாளுமன்றத் தேர்தலில் மாற்றுத் திறனாளிகள் வாக்களிப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது. காலை 11.30 மணிக்கு தொடங்கும் என அறிவித்திருந்த நிலையில் அதிகாரிகள் நண்பகல் 1 மணிக்கே இக்கூட்டத்தை நடத்தினர். காலை முதல் சாப்பிடாமல் இருந்த மாற்றுத் திறனாளிகள் பலர் இதனால் பாதிப்புக்குள்ளாகினர். மாவட்ட வருவாய் அலுவலர் ராஜகிருபாகரன் தலைமையில் கூட்டம் நடந்தது. மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அலுவலர் சீனுவாசன், மாற்றுத் திறனாளிகள் லட்சிய முன்னேற்ற சங்க தலைவர் சந்தோஷ், பொதுச்செயலாளர் பொன்சண்முகம், பொருளாளர் தட்சணாமூர்த்தி மற்றும் பல்வேறு சங்கங்களின் நிர்வாகிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பேசுகையில், ஏப்ரல் 18ம் தேதி நடக்க உள்ள நாடாளுமன்ற தேர்தலில் மாற்றுத் திறனாளி வாக்காளர்கள் அனைவரும் எவ்வித இடர்பாடுகளும் இன்றி பாதுகாப்பாக வாக்களிக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் அதற்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் மாற்றுத் திறனாளிகள் கணக்கெடுக்கப்பட்டு, எண்ணிக்கைக்கு ஏற்ப சக்கர நாற்காலிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன.

கணக்கெடுப்பின் மூலம் கடலூர் மாவட்டத்தில் 13 ஆயிரம் மாற்றுத் திறனாளி வாக்காளர்கள் உள்ளனர் என்றார். மாற்றுத் திறனாளிகள் சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கைகள் வருமாறு:கடலூர் மாவட்டத்தில் 52 ஆயிரம் மாற்றுத் திறனாளிகள் தங்கள் பெயரை பதிவு  செய்துள்ளனர். அவர்களில் குழந்தைகளை தவிர்த்து, 30 ஆயிரத்திற்கு மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் வாக்களிக்க தகுதியுள்ள நிலையில் உள்ளனர். மாவட்ட நிர்வாகத்தின் கணக்கெடுப்பில் வெறும் 13 ஆயிரம் பேர் மட்டுமே மாற்றுத் திறனாளி வாக்காளர்கள் என்பதை ஏற்க முடியாது. முறைப்படி வீடு வீடாகச் சென்று மாற்றுத் திறனாளி வாக்காளர்களை கணக்கெடுக்க வேண்டும். சக்கர நாற்காலிகள் உள்ளே வருவதற்கு வசதியாக 5 அடி அகலத்திற்கு வாயில் உள்ளவாறு  வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட வேண்டும். முதுகு தண்டுவடம் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால் பாதிக்கப்பட்டு நடக்கமுடியாமல் இருக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு தேர்தல் ஆணையமே வாகன வசதி செய்து தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் முன் வைத்தனர். தேர்தல் ஆணைய விதிமுறைகளின் படி பரிசீலிப்பதாக மாவட்ட வருவாய் அலுவலர் கிருபாகரன் தெரிவித்தார்.

Tags : men ,
× RELATED இலுப்பூர் அருகே அனுமதியின்றி மணல் அள்ளிய டிராக்டர் பறிமுதல்