×

பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் நவீன தொழில்நுட்ப இலவச பயிற்சி வகுப்பு

திருப்பூர், மார்ச் 15: திருப்பூர் மாவட்டம்  பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் சார்பில் வேலையில்லா பட்டதாரிகளுக்கு இலவச தொழில்நுட்ப பயிற்சி பெற விண்ணப்பிக்க பொது மேலாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து தமிழக பி.எஸ்.என்.எல்., பொதுமேலாளர் ராஜூ கூறியிருப்பதாவது: தமிழக அரசின் திறன்மேம்பாட்டு கழகத்தின் கீழ் பி.எஸ்.என்.எல்., தொலைத்தொடர்பு நிறுவனம், வேலையில்லா இளைஞர்களுக்கு நவீன தொலைத்தொடர்பு சேவை குறித்த பயிற்சிகளை தொடர்ந்து வழங்கி வருகிறது. நெட்வொர்க் மேனேஜ்மென்ட் இன்ஜினியர், பிராட் பேண்ட் டெக்னீசியன், ஆப்டிகல் பைபர் ஸ்பைசர், டவர் டெக்னீசியன், டெலிகம்யூனிகேசன் உட்பட தொழில்நுட்பம் சார்ந்த பயிற்சிகள், அனுபவம் வாய்ந்த பி.எஸ்.என்.எல்., பொறியாளர்களால் நடத்தப்படுகின்றன. இதன்கீழ், தமிழகத்தில் மட்டும் சென்னை, கோவை, திருப்பூர், மதுரை உட்பட, 20 முக்கிய நகரங்களில், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேலையில்லா இளைஞர்கள் பயன் அடைந்துள்ளனர். இவர்களில், 18 ஆயிரத்துக்கு அதிகமானோர், பி.எஸ்.என்.எல்., உட்பட பல்வேறு நிறுவனங்களில் உடனடி வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர். இதனால், இளைஞர்கள் பி.எஸ்.என்.எல்., இலவச பயிற்சி வகுப்பில் பயன்பெற, ‘rgmttc.bsnl.co.in.jobportal’ எனும் இணைய முகவரில் முன்பதிவு செய்யலாம். இந்த அரிய வாய்ப்பை வேலையில்லா பட்டாதாரிகள் பயன்படுத்திக்கொள்ளவும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : BSNL ,company ,
× RELATED பந்தலூரில் பிஎஸ்என்எல் சேவை குறைபாடு