×

டெல்லியில் உள்நாட்டு பின்னலாடை கண்காட்சி திருப்பூர் உற்பத்தியாளர்களுக்கு 30 ஸ்டால்கள்

திருப்பூர், மார்ச் 15:டெல்லியில் கார்மென்ட் ஷோ ஆப் இந்தியா சார்பில்  உள்நாட்டு பின்னலாடை கண்காட்சியில் திருப்பூர் பின்னலாடை உற்பத்தியாளர்களுக்கு 30 ஸ்டால்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருப்பூர் தொழில் பாதுகாப்பு குழு வெளியிட்டுள்ள அறிக்கை.  கார்மென்ட் ஷோ ஆப் இந்தியா என்கிற பெயரில், உள்நாட்டு ஆயத்த ஆடை கண்காட்சி டெல்லி பிரகதி மைதானத்தில்  வரும் ஜூன் மாதம் 17ம் தேதி முதல் 19ம் தேதி வரை நடக்கிறது. இந்தியாவில் உள்ள பின்னலாடை உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் விதமாக புதிய கண்டுபிடிப்புகளை உலக அரங்குகளில் அறிமுகப்படுத்தும் விதமாக இந்த கண்காட்சி நடக்கிறது. இந்த கண்காட்சியில் 300 அரங்குகள் அமைக்கப்படும். இந்தியா முழுவதும் உள்ள  ஜவுளி உற்பத்தியாளர்களை ஒருங்கிணைத்து தங்களுடைய புது வகையான ஆயத்த ஆடைகளை காட்சிப்படுத்தி  சந்தைப்படுத்த ஒரு வாய்ப்பாக  கண்காட்சி அமையும். பின்னலாடை உற்பத்தியில் உலக அரங்கில் தனி முத்திரை பதித்துள்ள திருப்பூர் பின்னலாடை உற்பத்தியாளர்களுக்கு 30 ஸ்டால்கள் அமைக்க அனுமதி வழங்கியுள்ளனர்.  இந்த கண்காட்சியில் பின்னலாடை துறையினர் பங்கேற்க, தொழில் பாதுகாப்புக்குழு ஏற்பாடு செய்துள்ளது. விருப்பமுள்ள உள்நாட்டு ஆடை உற்பத்தி துறையினர், ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்தில் இயங்கும் தொழில் பாதுகாப்புக்குழு அலுவலகத்தை நேரில் அணுகி, வருகையை பதிவு செய்யலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : knitting exhibition ,Delhi ,manufacturers ,Tirupur ,stalls ,
× RELATED தூத்துக்குடியில் நாளை முதல் அனைத்து...