×

ஒரே இரவில் அடுத்தடுத்து துணிகரம் 6 கோயில்களில் பணம் கொள்ளை

சென்னை, மார்ச் 15: சென்னை அடுத்த உத்திரமேரூர், சாலவாக்கத்தில் திரவுபதி அம்மன் கோயில் உள்ளது. இங்கு தினமும் காலை, மாலை வேளைகளில் பூஜை நடைபெறுவது வழக்கம். இதையொட்டி, ஏராளமான பக்தர்கள் வந்து அம்மனை தரிசித்து செய்வதுண்டு. நேற்று முன்தினம் இரவு பூஜை முடிந்ததும் கோயில் கதவை பூட்டி விட்டு பூசாரி வீட்டுக்கு சென்றார். நேற்று காலை நடையை திறக்க வந்தபோது, கோயில் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது மர்ம நபர்கள் உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரிந்தது. இந்த கோயிலின் அருகே விநாயகர் சன்னதி உள்ளது. அந்த கதவின் பூட்டும் உடைக்கப்பட்டு, உண்டியல் பணம் கொள்ளை போனது.அதேபோல் உத்திரமேரூர், திருமுக்கூடலில் உள்ள தான்தோன்றி அம்மன் கோயிலில் நேற்று காலை நடையை திறக்க பூசாரி வந்தபோது, அங்கிருந்த உண்டியல் உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதுமட்டும் இல்லாமல் அந்த கோயிலின் அருகே உள்ள செல்வ விநாயகர், சித்தி விநாயகர், மாரியம்மன் ஆகிய கோயில்களின் பூட்டை உடைத்து மர்ம ஆசாமிகள் உண்டியல் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.இதுகுறித்த புகாரின்படி சாலவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம ஆசாமிகளை வலைவீசி ேதடி வருகின்றனர். ஒரே இரவில் 6 கோயில்களில் உண்டியல் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : heroines ,
× RELATED விஜய்யின் கோட் டில் இணைந்த திரிஷா