×

மதுராந்தகத்தில் குற்றங்களை தடுக்க வியாபாரிகளுடன் போலீசார் ஆலோசனை

மதுராந்தகம், மார்ச் 15: மதுராந்தகம் நகராட்சியில் குற்ற சம்பவங்களை தடுப்பது குறித்து, அப்பகுதி வியாபாரிகளுடன் போலீசார் ஆலோசனை நடத்தினர். இதில், நகர் முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்த முடிவு செய்யப்பட்டது. மதுராந்தகம் அடுத்த அச்சிறுப்பாக்கம் பேரூராட்சியில் நடக்கும் குற்ற சம்பவங்களை தடுப்பது குறித்த ஆலோசனை கூட்டம், அச்சிறுப்பாக்கம் போலீசார் சார்பில், அதே பகுதியில் உள்ள சமுதாய நலக் கூடத்தில் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் நேற்று முன்தினம் நடந்தது. கூட்டத்தின் இன்ஸ்பெக்டர் சரவணன் பேசுகையில், இந்த பகுதியில் வியாபாரம் செய்யும் அனைவரும் தங்களது கடைகளில், வணிக நிறுவனங்களில், சிசிடிவி கேமராக்களை பொருத்த வேண்டும். அப்படி செய்வதன் மூலம் வணிகர்களுக்கும், பொதுமக்களுக்கும் பாதுகாப்பாக இருக்கும்.

 இந்த திட்டத்திற்கு நீங்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றார். அதற்கு, வணிகர்களும் கூடிய விரைவில் சிசிடிவி கேமராக்களை பொருத்த நடவடிக்கைகள் மேற்கொள்வதாக தெரிவித்தனர். இதற்கிடையில், கூட்டத்தில் கலந்துகொண்ட வணிகர்கள் பாஸ்கர், சிசுலால், ஏகாம்பரம், ரவிசந்திரன், கதிரேசன் உள்பட சிலர், தற்போது தனியார் மற்றும் அரசு பஸ்கள் பஜார் வீதி வருவதில்லை. இதனால் பயணிகள் இப்பகுதிக்கு வருவதை தவிர்த்துள்ளனர். இதையொட்டி, போதுமான வியாபாரம் இல்லை. முன்பு போல் வியாபாரம் நடக்க, பஸ்கள் ஏற்கனவே பஜார் வீதிக்கு வந்தது போல், மீண்டும் வருவதற்கு போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன் மூலம் தங்களுக்கு ஓரளவு வியாபாரம் நடைபெறும். சிசிடிவி கேமராக்களை பொருத்தவும் பொருளாதார தடை இருக்காது என்றனர்.

Tags : merchants ,crimes ,Mathura ,
× RELATED வணிகர் சங்கங்களின் பேரமைப்பு...