×

திண்டிவனம், மரக்காணத்தில் மாணவர்கள், மக்கள் போராட்டம்

திண்டிவனம், மார்ச் 15:     கோவை மாவட்டம்  பொள்ளாச்சியில் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தை கண்டித்தும்  குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் திண்டிவனம் அடுத்த மேல்பாக்கத்தில் அமைந்துள்ள கோவிந்தசாமி அரசினர் கலை அறிவியல் கல்லூரி மாணவ, மாணவிகள் சுமார் 1000க்கும் மேற்பட்டோர் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் போது மாணவ,  மாணவியர்கள் பாலியல் விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்ட குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும். பாதிப்படைந்த பெண்களுக்கு சரியான நீதி வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர். மரக்காணம்: பொள்ளாச்சியில் பெண்களுக்கு எதிராக பாலியல் வன்கொடுைம செய்தவர்களை கைது செய்யக்கோரியும், பாலியல் வன்கொடுமை செய்தவர்களுக்கு ஆதரவாக செயல்படும் தமிழக அரசை கண்டித்தும் மரக்காணத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் பெண்கள் கலந்துகொண்டு பெண்களை பாதுகாக்க வேண்டும். குற்றவாளிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷமிட்டனர்.

Tags : Tindivanam ,Marakkanam ,
× RELATED திண்டிவனம்-நகரி திண்டிவனம் -...