×

கல்குவாரிகளை மூடக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்

திருமயம், மார்ச் 15: புதுக்கோட்டை மாவட்டம் திருமயம், இலுப்பூர், அன்னவாசல், பொன்னமராவதி உள்ளிட்ட பகுதியை சுற்றியுள்ள கிராம மக்கள் ஒரு காலத்தில் விவசாயத்தையே நம்பி இருந்தனர். அதேசமயம் அப்பகுதியில் தலையடிகள் அதிகம் இருந்ததால் அப்பகுதியில் இருந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு ஜல்லிகல், முண்டு கல் உள்ளிட்டவைகள் வினியோகம் செய்யப்பட்டது. இந்நிலையில் காலப்போக்கில் பருவமழையின் அளவு குறைந்து விவசாயம் பாதிக்கப்பட்டது. இதனிடையே கட்டிடங்கள் கட்ட, சாலைகள் அமைக்க பறையில் இருந்து வெட்டி எடுக்கப்படும் கற்கள் மவுசு அதிகமானது. இதனை பயன்படுத்தி கொண்ட அரசியல் பிரமுகர்கள் பறைகள் உள்ள விளைநிலங்கள், கொல்லைகாடுகள் விலை கொடுத்து வாங்கி அதிலிருந்த பாறைகளை வெட்டி எடுத்தனர். இதன் மூலம் நல்ல வருமானம் கிடைத்த நிலையில், வெளி மாவட்டம், மாநிலங்களுக்கும் அதிகளவு பறைகள் ஜல்லிகளாக லாரிகள் மூலம் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இது விளைநிலங்களை பாதிப்பதோடு நின்றுவிடாமல் அப்பகுதியில் வாழும் மக்களுக்கு பிரச்னை ஏற்படுத்துவதோடு அளவுக்கு அதிகாமாக பாறைகள் வெட்டி எடுக்கப்படுவதாக மனதுக்குள்மக்கள் குமுறுகின்றனர். இதில் ஒருசில கிராம மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை என வேதனை அடைவது ஒரு பக்கம் இருக்க இது பற்றி புகார் செய்யவே அஞ்சுகின்றன கிராம மக்கள் இருக்கின்றனர்.
இந்நிலையில் நேற்று திருமயம் அருகே உள்ள சந்தனவிடுதியைச் சேர்ந்த கிராம மக்கள் அப்பகுதியில் உள்ள கிரஷரை மூட வலியுறுத்தி சாலை மறியல் செய்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : road road ,Gulvarari ,
× RELATED கடலூர் மாவட்டம் சாலைவிபத்தில்...