×

புத்தக வெளியீட்டு விழா

நெல்லை, மார்ச் 15:  தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு டெல்லியில்  இந்தியன் நேஷனல் சயின்ஸ் அகாடமி சார்பில் முத்தமிழரசனின்  ‘பள்ளி மாணவர்களுக்கான அறிவியல் மேற்படிப்பு வழிமுறைகள்’ என்ற புத்தக வெளியீட்டு விழா நடந்தது. அகாடமி தலைவர் அஜய் சூட் வெளியிட, துணை தலைவர் அசோக் சிங்வி பெற்று கொண்டார். விழாவில் பேசிய சிங்வி, அறிவியல் மேற்படிப்பு படிக்க  விரும்பும் மாணவர்களுக்கு இப்புத்தகம் சிறந்த வழிகாட்டியாக அமையும் என்றார். மாணவர்களின் நலன் கருதி இப்புத்தகம் இலவசமாக பிரசுரிக்கப்படும் என்றும் குறிப்பிட்டார். இப்புத்தகத்தின் ஆசிரியர் முத்தமிழரசன் சேரன்மகாதேவி மாவடித் தெருவை சேர்ந்தவர். தாவர மரபியல் ஆராய்ச்சியில் 50க்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியுள்ளார். இந்தியன் நேஷனல் சயின்ஸ் அகாடமி மற்றும் நேஷனல் அகாடமி ஆப் சயின்ஸ்சஸ் அலகாபாத் ஆகியவற்றின் ‘இளம் விஞ்ஞானி’ விருதுகளையும் பெற்றுள்ளார். தற்போது டெல்லியில் தேசிய தாவர தொழில்நுட்பவியல் நிறுவனத்தில் இளநிலை விஞ்ஞானியாக பணியாற்றி வருகிறார்.

Tags : Book launch ceremony ,
× RELATED நூல் வெளியீட்டு விழா