×

வாக்குபதிவு ரசீதை பார்க்கவில்லையென்றால் தலைமை வாக்குச்சாவடி அலுவலரிடம் தெரிவிக்கலாம் ஆர்டிஓ தகவல்


காரைக்குடி, மார்ச் 15: காரைக்குடி புதிய பஸ்ஸ்டாண்ட் உள்பட மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் வருவாய் துறை சார்பில்  வாக்காளர் தாம் அளித்த வாக்கினை உறுதி செய்யும் கருவி (விவிபிஏடி கருவி) மற்றும் இவிஎம் மிஷின் செயல்விளக்கம் காண்பிக்கப்பட்டது. வாக்காளர் தாம் அளித்த வாக்கினை யாருக்கு அளித்தோம் என உறுதி செய்யும் கருவி கடந்த 2009ல் பரிட்சார்த்த முறையில் அறிவிக்கப்பட்டது. ஓட்டுப்பதிவு கட்டுப்பாட்டு கருவி மற்றும் ஓட்டு பதிவு இயந்திரத்துடன்  விவிபிஏடி மிஷின் இணைக்கப்பட்டு இருக்கும். வாக்காளர் ஓட்டு போடுவதற்கு முன்பு ஓட்டுப்பதிவு கட்டுப்பாட்டு கருவியில் உள்ள பட்டன் அழுத்தப்படும் அதன் பின்பு ஓட்டு பதிவு இயந்திரத்தில் பச்சை லைட் எரிந்தவுடன் தாங்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டுமோ,அந்த வரிசை எண்ணில் உள்ள பட்டனை அழுத்த வேண்டும். அப்போது அதன் அருகே உள்ள விவிபிஏடி மிஷினில் வாக்காளர் யாருக்கு வாக்களித்தார்களோ அவர்களது சின்னம், பெயர், மற்றும் வரிசை எண் டிஸ்பிளேயில் 7 நொடிகள் பார்க்கலாம். இந்த வாக்குப்பதிவு ரசீது இயந்திரம் மற்றும் மின்னணு வாக்குபதிவு இயந்திர செயல்விளக்கம் காரைக்குடி புதிய பஸ்ஸ்டாண்ட் உள்பட மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் ஆர்டிஓ ஈஸ்வரி தலைமையில் காண்பிக்கப்பட்டது.

தாசில்தார் பாலாஜி, தேர்தல் துணை வட்டாசியர் சந்திரபோஸ், மண்டல துணை வட்டாசியர் சுதா, வருவாய் ஆய்வாளர் புவனேஷ்வரி, தேர்தல் உதவியாளர் செல்வராஜ், விஏஓ சசிகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். தேர்தல் விளக்க நோட்டீஸ் வழங்கப்பட்டது.
அப்ேபாது  ஆடிஓ ஈஸ்வரி  கூறுகையில், `` விவிபிஏடி கருவியின் மூலம் வாக்காளர் வாக்காளித்த வேட்பாளரின் வரிசை எண், பெயர் மற்றும் சின்னம் ஆகிய விவரங்கள் உள்ளடக்கிய அச்சிட்ட தாளை 7 நொடிகள் பார்க்க அனுமதிக்கும். ரசீதை கண்ணாடி வழியாக பார்க்க மட்டுமே முடியும். இந்த ரசீது வாக்காளர்களுக்கு வழங்கப்படமாட்டாது. இதன் மூலம் வாக்காளர்கள் தேர்வு செய்து வாக்களித்த வேட்பாளருக்குதான் தனது வாக்கு செலுத்தப்பட்டது என்பதை உறுதி செய்து கொள்ளலாம். வாக்குப்பதிவு ரசீதினை பார்க்கவில்லை என்றாலோ, சத்தமான பீப் ஒலிகேட்கவில்லை என்றாலோ தலைமை வாக்குச்சாவடி அலுவலரிடம் தெரிவிக்கலாம்’’ என்றார்.



Tags : CEO ,Chief Electoral Officer ,
× RELATED மக்களவை தேர்தலில் வாக்களிக்க...