தமாகா மாநில செயலாளர் அறிக்கை

மதுரை, மார்ச் 15: தமிழ் மாநில காங்கிரஸ் மாநில செயலாளர் விஜயபிரபாகர் அறிக்கை:

மதுரை தெற்கு மாவட்டம் தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் அவசர ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் மாவட்ட, வட்டார நிர்வாகிகள், உட்பிரிவு அணித்தலைவர்கள் கலந்து கொண்டனர். விருந்தினராக மாநில நிர்வாகிகள் சிவசுந்தரம், துரை நாகராஜன் ஆகியோர் சிறப்பு கலந்து கொண்டனர். மதுரை தெற்கு மாவட்டம் தமிழ் மாநில காங்கிரசிலிருந்து மாவட்ட தலைவர் பேரையூர் குருசாமி விலகியுள்ளார். அவருடன் மற்றவர்கள் யாரும் செல்லாதபோது, தெற்கு மாவட்ட தமிழ்மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் மொத்தமாக விலகி விட்டதாக அவர் அறிக்கை தந்திருப்பது கண்டிக்கத்தக்கது. விரைவில் மாவட்ட தலைவரை மாநில தலைவர் ஜிகே வாசன் அறிவிப்பார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

More
>