×

திருத்துறைப்பூண்டி பகுதியில் 16வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி முகாம் இன்று துவக்கம்

திருத்துறைப்பூண்டி, மார்ச் 15: திருத்துறைப்பூண்டி பகுதியில் 16வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி முகாம் இன்று முதல் துவங்குகிறது.திருத்துறைப்பூண்டி ஒன்றியத்திலுள்ள 32 ஊராட்சிகளில்  அரசு கால்நடை பராமரிப்பு துறை மன்னார்குடி கோட்டம் சார்பில் 16வது சுற்று  கோமாரி நோய்தடுப்பூசி முகாம் இன்று (15ம் தேதி) முதல் அடுத்த மாதம் 3ம்  தேதி வரை நடைபெறுகிறது.இன்று நுணாக்காடு, ஆதிரெங்கம், 16ம்தேதி  எழிலூர், கச்சனம், 17ம்தேதி நேமம், விளத்தூர், 18ம் தேதி மேட்டுப்பாளையம்,  திருவலஞ்சுழி, கட்டிமேடு, 19ம் தேதி கொத்தமங்களம், ஆலத்தம்பாடி, 20ம் தேதி  கொத்தமங்களம், வேளூர், 21ம் தேதி ஆண்டாங்கரை, வரம்பியம், 22ம்  தேதி கீராளத்தூர், மேலமருதூர், 23ம் தேதி கொருக்கை, தலைக்காடு, 24ம் தேதி  கொருக்கை, மேல கொருக்கை, 25ம் தேதி கீரக்களூர், கொக்கலாடி, 26ம்  தேதி ராயநல்லூர், பிச்சன்கோட்டகம், 27ம் தேதி செட்டியமூளை,  காடுவாகொத்தமங்களம், பழையங்குடி, 28ம் தேதி விளக்குடி, நெடும்பலம், 29ம்  தேதி அம்மனூர், சேகல், 30ம் தேதி பனையூர், மணலி, 1ம் தேதி திருப்பத்தூர்,  குன்னூர், குரும்பல், 2ம் தேதி பூசாலாங்குடி, ஆலிவலம், கோமல், ஆதனூர், 3ம்  தேதி பாமணி, தேசிங்குராஜபுரம் ஆகிய ஊராட்சிகளிலும் நடக்கிறது.  மேலும் நகராட்சி  பகுதிகளில் காலை 6 மணி முதல் 9மணி வரையும், மாலை 3 மணி முதல் 6 மணிவரை  கால்நடைகளுக்கு தடுப்பூசி போடப்படுகிறது. விவசாயிகள் தங்களது கால்நடைகளை  100 சதவீதம் கொண்டு வந்து தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.இத்தகவலை கால்நடை  பராமரிப்பு துறை உதவி இயக்குநர் ஜான்சன் சார்லஸ் தெரிவித்துள்ளார்.

Tags : Round Virus Vaccine Camp ,Thiruthuraipoondi ,
× RELATED திருத்துறைப்பூண்டி நகராட்சி சுகாதார...