×

ஹனிவெல் நிறுவனம் ₹1.50 லட்சம் பரிசு பொறியியல் புதிய கண்டுபிடிப்புகளுக்கான போட்டியில் விஐடி மாணவர்கள் சாதனை வெற்றி பெற்ற மாணவர்களை வேந்தர் பாராட்டினர்

வேலூர், மார்ச் 15: ெபாறியியல் புதிய கண்டுபிடிப்புகளுக்கான போட்டியில் விஐடி மாணவர்களுக்கு ஹனிவெல் நிறுவனம் ₹1.50 லட்சம் பரிசு வழங்கியது. வெற்றி பெற்ற மாணவர்களை வேந்தர் ஜி.விசுவநாதன் பாராட்டினர். ஹனிவெல் நிறுவனம் விண்வெளி மற்றும் தானியங்கி வாகனங்களுக்கு தேவையான தொழில்நுட்பத்தை உருவாக்கி தருவதில் புகழ் பெற்ற நிறுவனமாகும். மேலும் கட்டிடங்கள் வீட்டு உபயோகப் பொருட்கள் தொழிற்சாலைகளுக்கு தேவையான மூலப்பொருட்களையும் உலகளவில் உருவாக்கி தருகிறது. இந்த நிறுவனத்துக்கு தேவையான தொழில்நுட்ப ரீதியான தீர்வுகளை பெரும் வகையில் பல்கலைக்கழகங்களுக்கிடையே புதிய தொழில்நுட்பம் உருவாக்கும் போட்டிகளை மாணவர்களுக்கு நடத்தி ரொக்க பரிசு வழங்கி வருகிறது.

அதன்படி, விஐடியில் பி.டெக் பொறியியல் பயிலும் மாணவர்களை ஒரே இடத்தில் திரட்டி தொடர் ஆராய்ச்சி மேற்கொள்ளும் வகையில், விஹாக் என்கிற ஹாக்கத்தான் போட்டியை அண்மையில் ஹனிவெல் நிறுவனம் விஐடியின் மகளிர் பொறியாளர்கள் அமைப்பு மின்பொறியியல் பள்ளியுடன் இணைந்து நடத்தியது. வேலூர் விஐடியில் நடந்த இந்த போட்டியில் விஐடியில் பயிலும் மாணவ, மாணவிகள் 95 பேர் கலந்து கொண்டனர். அவர்கள் 41 குழுக்களாக பிரிக்கப்பட்டு தொழில்நுட்ப தீர்வு காணும் ஆராய்ச்சியில் ஈடுபடுத்தப்பட்டனர். இதில் பங்கேற்றவர்களுக்கு செயற்கையான அறிவுத்திறன், இயந்திரம் பற்றி அறிந்து கொள்ளுதல், உருவ செயல்பாடு மற்றும் தகவல் சுரங்கம் உள்ளிட்ட 8 தலைப்புகளில் இந்த போட்டி நடத்தப்பட்டது.

விஐடி ஷேக்ஸ்பியர் அரங்கில் நடத்தப்பட்ட இந்த போட்டி நிகழ்வில் பங்கேற்றவர்கள் தொடர்ந்து 36 மணிநேரம் ஈடுபட்டு தொழில்நுட்ப தீர்வு கண்டனர். போட்டியினை நடத்திய நடுவர் குழுவினர் சிறந்த தீர்வுகளை தேர்வு செய்தனர். அதில் சைதன்யாகினி, யஷ்வர்தன்மாதூர், ஸ்ரீஹர்சா, மாணவர் குழுவினரின் தொழில்நுட்ப தீர்வினை முதலிடத்திற்கும், நந்தகிஷோர், அனிஷ்குமார் மற்றும் மயங்சேனாபதி குழுவினரின் தீர்வு 2ம் தேர்வு செய்தனர். அதை தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு நிகழ்ச்சியில் ஹனிவெல் நிறுவனத்தின் முதுநிலை பொறியியல் மேலாளர் கே.வெங்கடேஸ்வரா ரெட்டி பங்கேற்ற முதலிடம் பெற்ற குழுவினருக்கு ஹனிவெல் நிறுவனத்தின் பரிசுத்தொகை ₹1 லட்சமும், 2ம் பெற்ற குழுவிற்கு ₹50 ஆயிரமும் வழங்கினார். இதில் ஹனிவெல் நிறுவனத்தின் தொழில்நுட்ப முதன்மையர் நவீன், விஐடி மின்பொறியியல் பள்ளி டீன் ஹாக்கத்தான் நிகழ்வு அமைப்பாளர் பேராசிரியை விஜயபிரபா ஆகியோர் பங்கேற்றனர். ஹாக்கத்தான் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களை வேந்தர் ஜி.விசுவநாதன் பாராட்டினார்.

Tags : Honeywell ,competition ,Lakh Gift Engineering Vandhars ,VIT ,
× RELATED கோவை, ராமநாதபுரம், நெல்லையில்...