×

திருச்சி காவேரி மருத்துவமனையில் எடைகுறைவாக பிறந்த குழந்தைகளை வெற்றிகரமாக காப்பாற்றி சாதனை

திருச்சி, மார்ச் 14:  திருச்சி காவேரி மருத்துவமனை டாக்டர்கள் மருத்துவ நிர்வாகி முகமது ஆரிப், செயல் இயக்குனர் செங்குட்டுவன், செந்தில்குமார், சுரேஷ்செல்லையா ஆகியோர் கூட்டாக நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:திருச்சி காவேரி மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சை மையம் (என்ஐசியு) துவங்கப்பட்டு பத்து ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. மிகவும் எடை குறைவாக பிறக்கும் குழந்தைகள், கற்பகாலம் முழுமையடையும் முன்பே பிறக்கும் பிரீமெச்சூர்டு குழந்தைகளை பராமரிக்கவே இந்த பச்சிளம் குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சை மையம் துவங்கப்பட்டுள்ளது. 500 கிராம் மட்டுமே எடையுடன் பிறந்த குழந்தையை காப்பாற்றி உள்ளோம். அந்த வகையில் ஒரு கிலோவுக்கும் குறைவான எடையுடன் பிறந்த 200க்கு அதிகமான குழந்தைகளை வெற்றிகரமாக காப்பாற்றி சாதனை புரிந்துள்ளது. எடை குறைவாக பிறக்கும் குழந்தைகளுக்கு நுரையீரல், கிட்னி போன்றவை முழுமையாக இயங்காது. அவற்றை இயங்க வைத்து, குழந்தைகளை காப்பாற்றிக் கொடுக்கிறோம். இதுவரை 3,000க்கும் அதிகமான குறைந்த எடையுள்ள குழந்தைகளை காப்பாற்றி உள்ளோம். என்ஐசியுவில் 40 படுக்கை கொண்ட யூனிட் செயல்படுகிறது. பச்சிளம் குழந்தைகளுக்கான மருத்துவர் மற்றும் செவிலியர் மற்றும் சிறப்பு பயிற்சி பெற்ற பணியாளர்களை இந்த யூனிட் கொண்டுள்ளது. குறைந்த கட்டணத்தில் குழந்தைகளுக்கு சிகிச்சை பெற முடியும். பச்சிளம் குழந்தைகளை காப்பாற்றியதில் கேஎம்சி ஒரு மைல் கல்லை எட்டியுள்ளது. இதை கொண்டாடும் வகையில் எங்கள் மருத்துவமனை நிர்வாகம் சார்பில், பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவு கிராஜூவேட் டே (பட்டமளிப்பு நாள்) விழாவாக இன்று (நேற்று) கொண்டாடுகிறோம்’ என்றனர்.

Tags : children ,Trichy ,Kaveri Hospital ,
× RELATED பைக் மீது லாரி மோதி பெண் உயிரிழப்பு