×

புதுகை எஸ்பி அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை

புதுக்கோட்டை, மார்ச் 14: புதுக்கோட்டை மாவட்டத்தில் எஸ்பி அலுவலகத்தில்  டிஎஸ்பி தலைமையில் தேர்தல் பிரிவு தொடங்கப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தியாவின் 17 வது பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழகத்தில் உள்ள 39 பாராளுமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் வரும் ஏப்ரல் 18ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் தேதி அறிவித்தவுடன் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். வேட்பாளர் தேர்தல் செலவுகளை கண்காணிக்கும் குழுக்குள் கட்சிகள் சார்பில் வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் பிரசாரம் தொடங்கிய பிறகு இப்பணிகளில் ஈடுபடுவார்கள். மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதபோல் புதுக்கோட்டை மாவட்ட காவல் துறை சார்பில் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் தனியாக கட்டுபாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. மாவட்ட எஸ்பி செல்வராஜ் மேற்பார்வையில் டிஎஸ்பி குணசேகரன் தலைமையில் இன்ஸ்பெக்டர் பழனியம்மாள் மற்றும், இரண்டு சப்-இன்ஸ்பெக்டர்கள், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள், கணிப்பொறி இயக்கும் போலீஸ் மற்ற பணிகளுக்கு தேவையான சில போலீசார் என 15 போலீசார் கொண்ட காவல் கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இவர்கள் மாவட்டத்தில் தேர்தல் விதிமுறைகள் குறித்து கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள். மேலும் இவர்களுக்கு வரும் புகார்கள் குறித்து சம்மந்தப்பட்ட போலீஸ் ஸ்டேசன்களுக்கு தெரியப்படுத்தி நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்வார்கள். கடந்த ஞாயிற்று கிழமை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு நேற்று வரை தேர்தல் விதிமுறைகள் மீறல் தொடர்பான எந்தவித வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



Tags : Election Control Room ,SSP Office ,
× RELATED வாக்காளர்களுக்கு விநியோகம் செய்த ₹22 ஆயிரம் சிக்கியது அணைக்கட்டு அருகே