×

பதற்றம் நிறைந்த வாக்குசாவடிகளில் பாதுகாப்புக்காக துணை ராணுவம் தேர்தல் ஆணையம் உத்தரவு

புதுக்கோட்டை,  மார்ச் 14: பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகளில் துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு கிராமங்களில் உள்ள வாக்குச் சாவடிகளில் அடிப்படை வசதிகள் மற்றும் கூடுதல் பாதுகாப்பு வசதிகள் குறித்து அந்தந்த மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதில் அந்தந்த மாவட்ட வாக்கு சாவடிகளில் குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் சரியான முறையில் போதுமான அளவிற்கு செய்யப்பட்டுள் ளனவா, என வருவாய் துறை அதிகாரிகளிடமும் அதேபோல் பதற்றம் நிறைந்த வாக்கு சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.இந்திய தேர்தல் ஆணையத்தினுடைய அறிவிக்கையின் படி தேர்தல் பணிகள் முழு மையாக அந்தந்த மாவட்டங்களில் தொடங்கப்பட்டுள்ளது. வாக்காளர்களுக்கு தொடர்ச்சியாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது, முதல் முறை வாக்காளர் களுக்கு எப்படி வாக்களிக்க வேண்டும் என்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டு வருகிறது.

பாராளுமன்ற தேர்தல் சுமூகமாகவும், அமைதியாகவும் நடைபெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது. வாக்கு சாவடிகளில் உள்ள அடிப் படை வசதிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. பதற்றம் நிறைந்த வாக்கு சாவடிகளில் அந்தந்த மாவட்ட எஸ்பிகளுடன் தேர்தல் அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகிறது. 100 சதவிதம் வாக்குகள் பதிவாகுவதற்கான நடவடிக்கை, மாற்று திறனாலிகள் வாக்கு அளிக்கும் விதமாக சக்கர நாற்களிகள், பிரைலி முறையில் வாக்கு இயந்திரங்கள், அவருடன் ஒரு உதவியாளர் என வசதிகள் செய்யப்பட உள்ளன. பதற்றம் நிறைந்த வாக்கு சாவடிகளை கண்டறிந்து கூடுதல் துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

Tags : subcommittee ,Election Commission ,
× RELATED ஜாதி, மதம், மொழி ரீதியாக வாக்குகள்...