×

ஜெயங்கொண்டம் அருகே மயானத்தில் குப்பை கிடங்கு பொதுமக்கள் சாலைமறியல்

ஜெயங்கொண்டம், மார்ச் 14: ஜெயங்கொண்டத்தில், மயானத்தில் குப்பை கிடங்கு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் 4 சமுதாய மக்கள் பயன்படுத்தும் கீழக்குடியிருப்பு கிராமத்திற்கு சொந்தமான சுடுகாட்டில் நகராட்சியினர் குப்பை கிடங்கு கட்ட ஏற்பாடு செய்து, ஜல்லி, மணலை நேற்று முன்தினம் இரவு இறக்கியுள்ளனர்.  இதனை அறிந்த ஊர் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து ஜெயங்கொண்டம் - விருத்தாச்சலம் சாலையில் மறியல் போராட்டம் நடத்தினர்.இதுபற்றி அப்பகுதிகள் மக்கள் சம்பந்தப்பட்ட நகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை மனு கொடுத்தும் எந்த பயனும் இல்லை. மேலும் இதுகுறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள் வந்தால் மட்டுமே பேச்சுவார்த்தைக்கு வருவதாகவும், மேலும் உடனே கொட்டப்பட்ட ஜல்லி, மணலை அப்புறப்படுத்த வேண்டும் என உறுதியளித்தால் மட்டுமே மறியலை கைவிடுவோம் என தெரிவித்தனர். தகவலறிந்த ஜெயங்கொண்டம் இன்ஸ்பெக்டர் ராஜ்மோகன் தலைமையிலான போலீசார் மற்றும் நகராட்சி மேலாளர் அரங்கபார்த்திபன், வருவாய் ஆய்வாளர் சிவசக்தி உள்ளிட்ட அதிகாரிகள் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி  அளித்ததின் பேரில் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Tags : Roadshops ,cemetery ,Jayankondam ,
× RELATED ஜெயங்கொண்டம் அருகே சிறுமியை திருமணம் செய்த கூலி தொழிலாளி போக்சோவில் கைது