பங்குனி உத்திரம் திருவிழா கொடி ஏற்றத்துடன் துவக்கம்

போடி, மார்ச் 14: போடியில் உள்ள அருள்மிகு சுப்பிரமணியர் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் துவங்கியது.போடி காமராஜர் சாலையில் பழமைவாய்ந்த அருள்மிகு சுப்பிரமணியர் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஒவ்வொரு வருடம் பங்குனி உத்தர திருவிழா மிகச்சிறப்பாக நடத்தப்படுவது வழக்கம். இந்த கோயில் இந்து அறநிலையத்துறையின் கட்டுபாட்டில் உள்ளது. முருகபெருமானின் 3வது படை வீடான திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள திருவாவினன்குடியான பழனியில் உத்திர நட்சத்திர திதியில் நடைபெறும் பங்குனி உத்தர திருவிழா முக்கயத்துவம் கொண்டதாகும். வருகிற 21ம் தேதி பங்குனி உத்தர திருவிழா நடைபெற இருப்பதால் போடி சுப்பிரமணியர் கோயிலில் நேற்று முன்தினம் கொடி ஏற்றம் நடந்தது. இதையொட்டி முருகபெருமானுக்கு 16 வகையான சேடாபிஷேகம் மற்றும் தீப ஆராதனைகளும் செய்யப்பட்டது. கோயில் முன்பாக உள்ள கொடி மரத்தில் சேவல் கொடி ஏற்றப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

Related Stories:

>