×

ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிஷேகம்

ராமேஸ்வரம், மார்ச் 14: ராமேஸ்வரம் வர்த்தகன்தெரு பால ஆஞ்சநேயர் கோயிலில் அமைந்துள்ள பழமையான ராமநாம ஸ்தூபி கும்பாபிஷேகம் 50 ஆண்டுகளுக்குப்பின் நேற்று நடைபெற்றதையொட்டி நேற்று முன்தினம் காலை முதல் கால பூஜையும், நேற்று அதிகாலை 5 மணிக்கு இரண்டாம் கால பூஜையும் நடைபெற்றது. தொடர்ந்து 7 மணிக்கு பூர்ணாஹூதி முடிந்து புனித நீர் கலச ஊர்வலம் நடைபெற்றது. பிறகு ராமநாம ஸ்தூபி கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. ராமகிருஷ்ணஜோசி, சுவாமிநாதன், மாதுகுருக்கள் கும்பாபிஷேகத்தை நடத்தினர். பின் பட்டாபிஷேக ராமருக்கு அபிஷேக ஆராதனைகள் மற்றும் சிறப்பு பூஜைகள் செய்து பிரசாதம் வழங்கப்பட்டது. கோடூர் ரமணி சாஸ்திரி, ராமதாஸ், முத்துக்கிருஷ்ணன், சுவாமிநாதன், வெங்கடேஷ் உட்பட ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


Tags :
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை