×

யினர் கோரிக்கை விடுத்துள்ளனர். சாலை பணியாளர்களை சொந்த வேலைக்கு பயன்படுத்தும் அவலம்

திருப்பூர், மார்ச் 14:  திருப்பூர் மாவட்டத்தில் நெடுஞ்சாலை துறை சாலை பணியாளர்களை அதிகாரிகளில் சொந்த வேலைக்கு பயன்படுத்தும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம் நெடுஞ்சாலை துறையில் திருப்பூர், தாராபுரம் ஆகிய இரு கோட்டங்கள் உள்ளது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சாலை பணியாளர்கள் வேலை செய்கின்றனர். சாலை பணியாளர்கள் மாநில, தேசிய நெடுஞ்சாலைகளில் ஏற்படும் பழுதுகளை நீக்கி மராமத்துபணிகளை செய்து வந்தனர். ரோட்டின் ஓரங்களில் வளர்ந்துள்ள செடி, கொடிகளை அகற்றுவது, மரக்கன்றுகள் நடுவது உட்பட பல்வேறு பணிகளை செய்து வந்தனர். தற்போது தமிழ்நாடு முழுவதும் 12 ஆயிரத்துக்கு மேற்பட்ட சாலை பணியாளர்கள் உள்ளனர். சாலை பணிகளை செப்பனிட, மராமத்து பணிகள் செய்ய கல் சிப்ஸ், தார், வாகனங்கள், டீசல், சட்டி, தள்ளுவண்டி உட்பட பல்வேறு பொருட்களை இருப்பு வைத்து பணிகள் செய்து வந்தனர். கடந்த ஒரு ஆண்டாக சாலை பணியாளர்களுக்கு தேவையான மூலப்பொருட்கள் இருப்பு இல்லாததால், காலையில் அலுவலகம் வந்து வருகைபதிவேட்டில் கையெழுத்து இடுகின்றனர்.

பின் களப்பணிக்கு செல்லாமல் ஒரு சில அதிகாரிகளின் சொந்த வேலையை செய்து வருகின்றனர். மேலும் மற்ற தொழிலாளர்கள் தங்களுடைய வீடுகளுக்கு சென்று விடுகின்றனர். ஆனால் நெடுஞ்சாலை துறை கோட்டத்தின் செயற்பொறியாளர்கள், உதவி செயற்பொறியாளர்கள் தொலைநோக்கு பார்வையுடன் சாலை பணியாளர்கள் மூலம் மரங்களை வளர்க்க ஒத்துழைப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மரங்களை காய்ந்து போகாமல் வளர்த்தால் தான் மாத சம்பளம் கிடைக்கும் என்ற நிபந்தனைகளை விதிக்க வேண்டும். இதற்கு மாநில அரசும், அதிகாரிகளும் கவனம் செலுத்த வேண்டும்.

Tags : road ,road staff ,
× RELATED 5 ஆண்டு திட்டம் போல் ஜவ்வாய் இழுக்கும் லெனின் வீதி சாலைப்பணி