×

புதன்சந்தையில் ஆடு விற்பனை ேஜார்

சேந்தமங்கலம், மார்ச் 14: நாமக்கல் மாவட்டம், புதன்சந்தையில் வாரந்தோறும் புதன்கிழமைகளில் சந்தை கூடுவது வழக்கம். நேற்று கூடிய சந்தையில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான ஆடுகள் விற்பனைக்கு வந்திருந்தது. இதனை வாங்க நாமக்கல், சேந்தமங்கலம், எருமப்பட்டி,  பவித்திரம், புதுச்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஏராளமான வியாபாரிகள்  மற்றும் விவசாயிகள் வந்திருந்தனர். இதனால் சந்தையில் கூட்டம் அலைமோதியது. வறட்சி காரணமாக, சந்தைக்கு ஆடுகளின் வரத்து கடந்த வாரத்தை விட அதிகமாக இருந்தது. இதில் 10 கிலோ எடையுள்ள ஆடு கடந்த வாரம் ₹4500க்கும், இந்த வாரம் ₹4,600க்கும், ₹3,700க்கும் விற்பனை செய்யப்பட்ட ஆடு இந்த வாரம் ₹3,800க்கும் விலை போனது. கடந்த வாரத்தை விட ஆடு ஒன்றுக்கு ₹100 அதிகம் கிடைத்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

Tags : Budhan ,
× RELATED புத்தன் அணையில் இருந்து தினமும் 420 லட்சம் லிட்டர் குடிநீர் வினியோகம்