×

நாகை அடுத்த காடம்பாடியில் சாலையை ஆக்கிரமித்து கட்டிட பணி அதிகாரிகள் சோதனை

கீழ்வேளூர், மார்ச் 14: நாகையை அடுத்த காடம்பாடியில் சாலையை ஆக்கிரமித்து கட்டிடப்பணி நடப்பதால் ஆணையரிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாகையை அடுத்த காடம்பாடியில் சொக்கநாதர் கோயில் தெரு பகுதியில் மகாலெட்சுமி நகர், நெய்தல் நகர், பூங்கா நகர் மற்றும் சுனாமி குடியிருப்பு பகுதிகளுக்கு செல்லும் மெயின் ரோட்டின் ஓரத்தில் புறம்போக்கு என்று கூறப்படும் என்ற இடத்தில் தனிநபர் ஒருவர் சாலையை ஆக்கிரமித்து  சுற்று சுவர் கட்டி வருகிறார். இதனால் அந்த சாலை குறுகளான சாலையாக மாறிவருவதோடு அந்த சாலையில் லாரி, பேருந்துகள் போன்ற கனரக வாகனங்கள் சென்றுவர முடியாத நிலை ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் அந்த பகுதியில் அதிக அளவில் குடியிருப்பு உள்ளதாலும், அந்த பகுதி தற்போது விரிவடைந்து வருவதாலும் பேருந்து  வழித்தடமாக  மாறும் நிலை உள்ளதால் சாலை ஓர ஆக்கிரமைப்பால் வரும் காலத்தில் பெரும் இடையூறு ஏற்படும் நிலை உருவாகும்.   இது குறித்து அப் பகுதி நாகை நகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் புகார் மனு அளித்தனர்.  பொது மக்களிடம் புகார் மனுவை பெற்றுக் கொண்ட நாகை நகராட்சி ஆணையர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். உரிய நடவடிக்கை எடுக்க வில்லை என்றால் போராட்டத்தில் ஈடுப்படுவதாக அப் பகுதி மக்கள் தெரிவித்தனர்.

Tags : Navagi ,road ,building officers ,
× RELATED போக்குவரத்துக்கு லாயக்கற்று...