×

நண்டலாறு செக்போஸ்ட்டில் போலீசார் தீவிர சோதனை

தரங்கம்பாடி, மார்ச் 14: நாகை மாவட்டம், தரங்கம்பாடி அருகே உள்ள நண்டலாறு செக்போஸ்ட்டில் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலில் உள்ளதால் தரங்கம்பாடி அருகே உள்ள நண்டலாறு செக்போஸ்ட்டில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். காரைக்காலில் இருந்து வரும் வாகனங்கள் மற்றும் காரைக்கால் செல்லும் வாகனங்களும் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் பூம்புகார் சட்டமன்ற தொகுதிக்கு 3 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தரங்கம்பாடி தேசிய நெடுஞ்சாலை 45 சிறப்பு தாசில்தார் சித்ரா, நாகை தேசிய நெடுஞ்சாலை 45 சிறப்பு தாசில்தார் சுந்தரி, குத்தாலம் துணை தாசில்தார் சேதுராமலிங்கம் ஆகியோர் தலைமையில் 3 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

Tags : checkpost ,Nandalaru ,
× RELATED தமிழ்நாடு ஆந்திர எல்லையில் 40 கிலோ வெள்ளி பொருட்கள் பறிமுதல்..!!