×

குடியாத்தம் காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம்

வேலூர், மார்ச் 14: குடியாத்தம் காவல் நிலையத்தில் நேற்று பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம் அடைந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. குடியாத்தம் அடுத்த வளத்தூர் கிராமத்தை சேர்ந்த பிரபாகரன் மகன் பிரசாந்த்(22), சித்தூர்கேட், ஜோதிநகர் பகுதியை சேர்ந்த பகிம் மகள் தபசன்(20), இருவரும் ஆம்பூரில் உள்ள தனியார் தோல் தொழில்சாலையில் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், இருவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தார்களாம்.இதுகுறித்து இரு வீட்டு பெற்றோருக்கும் தெரியவந்தது. மேலும், இருவரும் வேறு மாற்று மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால் காதலுக்கு இருவீட்டு பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் பிரசாந்த், தபசன் கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டில் இருந்து வெளியேறி திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களை இரு வீட்டு பெற்றோரும் தேடிவந்த நிலையில்,நேற்று காலை குடியாத்தம் டவுன் போலீஸ் நிலையத்தில் காதல் தம்பதி பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர். இருவரும் மேஜர் என்பதால் குடியாத்தம் டவுன் இன்ஸ்பெக்டர் இருதயராஜ், அவர்களை குடியாத்தம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். மேலும், இருவீட்டு கிராமத்தை சேர்ந்தவர்கள் காவல் நிலையம் வளாகத்தில் குவிந்ததால் அங்கு பரபரப்பு காணப்பட்டது.

Tags : police station ,Gudiyatham ,
× RELATED அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்..