×

சேலம் நாடாளுமன்ற தொகுதியிலுள்ள 242 பதற்றமான வாக்குச்சாவடிகளில் துணை ராணுவம் பாதுகாப்பு

சேலம், மார்ச் 12: சேலம் நாடாளுமன்ற தொகுதியில் உள்ள 242 பதற்றமான வாக்குச்சாவடிகளுக்கு துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர் என கலெக்டர் ரோகிணி தெரிவித்தார். நாடாளுமன்ற தேர்தல் தேதி நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இதுதொடர்பாக, சேலம் மாவட்ட கலெக்டரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான ரோகிணி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து சேலம் மாவட்டத்தில், தேர்தல் நடத்தை விதிகள் முழுமையாக அமலுக்கு வந்துள்ளது. சேலம் நாடாளுமன்ற தொகுதியில் 8,00,320 ஆண் வாக்காளர்கள், 7,92,090 பெண் வாக்காளர்கள், மற்றவர்கள் 77 பேர் என மொத்தம் 15,92,487 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களுக்கு 583 இடங்களில் 1,809 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இவற்றில், மாநகரப்பகுதிகளில், 161, மாவட்ட பகுதிகளில் 81 என மொத்தம் 242 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக ண்டறியப்பட்டுள்ளது. மேலும் 2 கூர்ந்தாய்வு (கிரிட்டிக்கல்) வாக்குச்சாவடிகளும் கண்டறியப்பட்டுள்ளது. இந்த வாக்குச்சாவடிகளில் தேர்தல் பணியில் ஈடுபடுத்த துணை ராணுவத்தினர் வரவழைக்கப்படுகின்றனர்.

தேர்தல் விதிமீறல் தொடர்பான புகார்களை 1800-4257020 என்ற எண்ணிலும், சி-விஜில் என்ற செயலி மூலமாகவும் பொதுமக்கள் தெரிவிக்கலாம். இதற்கென கலெக்டர் அலுவலகத்தில் 24 மணிநேரமும் செயல்படும் தேர்தல் கட்டுப்பாட்டு அறை துவங்கப்பட்டுள்ளது. சேலம் தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையம் கருப்பூர் அரசு இன்ஜினியர் கல்லூரியில் அமைக்கப்படவுள்ளது. சுவர் விளம்பரங்கள் அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் மூலம் அழிக்கப்பட்டுகின்றன. இதற்கான செலவும்,  ெமாத்தமாக எஸ்எம்எஸ் அனுப்புதல் உள்ளிட்ட புதுைமயான பிரச்சார செலவும், வேட்பாளர் செலவின கணக்கில் சேர்க்கப்படும். உரிய அனுமதியை பெற்ற பின்னரே, உள்ளூர் சேனல்களில் விளம்பரங்கள் மேற்கொள்ள வேண்டும். இந்த பிரச்சாரங்களை கண்காணிக்க வீடியோ கண்காணிப்பு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

வாக்காளர்களுக்கு பணம்,அன்பளிப்பு,டாேக்கன் வழங்குதல் போன்றவற்றை தடுக்க கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ளதால், உரிய ஆவணங்கள் இன்றி ₹50,000க்கு மேல் எடுத்து செல்லப்படும் ரொக்கம் பறிமுதல் செய்யப்படும். முக்கிய பிரமுகர்கள் ₹1 லட்சத்திற்கு மேல் எடுத்துச்செல்ல கூடாது. மேலும், ₹10 லட்சத்திற்கு மேல் பறிமுதல் செய்யப்படும் ரொக்கம் குறித்து, வருமான வரித்துறைக்கு தகவல் தெரிவிக்கப்படும். எனவே பணம் கொண்டு செல்லும் வியாபாரிகள், அதற்கான உரிய ஆவணங்களை வைத்திருக்க வேண்டும். இவ்வாறு கலெக்டர் ரோகிணி தெரிவித்தார்.

அனைத்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை
தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து அனைத்து கட்சி பிரமுகர்களுடனான ஆலோசனை கூட்டம் நடந்தது. கலெக்டர் ரோகிணி தலைமை வகித்து பேசினார். அப்போது தேர்தல் நடத்தை விதிகள், கட்சிகள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள், விதிகளை மீறும் கட்சிகள் மீதான நடவடிக்கைகள் குறித்து பேசினார். தொடர்ந்து, விதிமுறைகளை கடைபிடித்து, தேர்தலை சிறப்பாக நடத்த ஒத்துைழக்கும்படி கேட்டுக்கொண்டார். கூட்டத்தில், டிஆர்ஓ திவாகர், மாநகராட்சி கமிஷனர் சதீஸ், போலீஸ் கமிஷனர் சங்கர், எஸ்பி தீபா கணிகர் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

Tags : constituency ,Salem ,
× RELATED ஆணவத்திமிறால் பேசாதப்பா… அதிமுக ஒரு...