×

கறம்பக்குடியில் புதிய தாலுகா அலுவலக கட்டிடம் திறப்பு விழா

கறம்பக்குடி, மார்ச் 12: கறம்பக்குடியில் பேரூராட்சிக்கு உட்பட்ட வாடகை திருமண மண்டபத்தில் தாலுகா அலுவலகம் இயங்கி வந்தது. அதன்பிறகு பொதுமக்களின் நீண்டகால கோரிக்கையை ஏற்று திருமணஞ்சேரி ஆர்ச் அருகே இடம் தேர்வு செய்யப்பட்டு புதிய தாலுகா கட்டிட பணிகள் செயல்பட்டு வந்தன. இந்நிலையில் நேற்று புதிய தாலுகா அலுவலக கட்டிடத்தை வீடியோ கான்பரன்சிங்கில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார். அதே வேளையில் புதுக்கோட்டை மாவட்ட கோட்டாட்சியர் தண்டாயுதபாணி தலைமை வகித்து புதிய தாலுகா அலுவலக கட்டிடத்தை குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார். கறம்பக்குடி தாலுகா தாசில்தார் வில்லியமோசஸ், கறம்பக்குடி வருவாய் ஆய்வாளர்கள் சசிகுமார், ஸ்டெல்லா
மற்றும் பலர் பங்கேற்றனர்.

Tags : office building ceremony ,Taluk ,Karambukkudi ,
× RELATED துபாய் வெள்ளத்தில் மகன் உயிரிழந்த...