×

நிறுத்தப்பட்ட அரசு பஸ் மீண்டும் இயக்கம் பொதுமக்கள் மகிழ்ச்சி

கறம்பக்குடி, மார்ச் 12: கறம்பக்குடியிலிருந்து தஞ்சை வழியாக இயங்கிய பேருந்து திடீரென நிறுத்தப்பட்டது. தினகரன் செய்தி எதிரொலியால் அரசு பஸ் மீண்டும் இயக்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் கும்பகோணம் அரசு போக்குவரத்து கழக பணிமனை  மூலம் தஞ்சாவூரில் இருந்து மறுங்குலம் ரெகுநாதபுரம் அம்புக்கோவில் வழியாக கறம்பக்குடிக்கு சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக அரசு பேருந்து இயக்கப்பட்டு வந்தது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் பயன்பெற்று வந்தனர். ஆனால் திடீரென்று கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக 50 ஆண்டுகளாக இயக்கப்பட்ட அரசு பேருந்து திடீரென்று நிறுத்தப்பட்டதால் அனைத்து தரப்பினரும் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

இதன் காரணமாக தனியார் பேருந்துகளில் கூட்டம் அதிகம் ஏற்பட்டு படிக்கட்டுகள் மற்றும் மேற்கூரைகளில் பயணிகள் செல்லும் நிலை ஏற்பட்டது. குறிப்பாக பள்ளி கல்லூரி மாணவர்களும் பஸ் பாஸ் மூலம் அரசு பேருந்துகளில் செல்லும் பள்ளி மாணவ, மாணவிகள் பெரிதும் சிரமப்பட்டு அவதிக்குள்ளாகி  அடிக்கடி விபத்துக்குள்ளாகும் நிலை ஏற்பட்டது. இதுபற்றி கடந்த வாரம் தினகரனில் படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் அரசு பேருந்து நேற்று முதல் தஞ்சாவூர் கறம்பக்குடி சாலையில் இயங்க தொடங்கின. இதற்காக செய்தி வெளியிட்ட தினகரன் நாளிதழுக்கும், அரசு போக்குவரத்து கழகத்திற்கும் பொதுமக்கள் நன்றியை
தெரிவித்து கொண்டனர்.

Tags : rest ,
× RELATED பெண் காவலர்கள் ஓய்வு இல்லத்தை திறந்து...