×

மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி அனாதை குழந்தைகளுக்கு இலவச புத்தாடை வழங்கல்

நாகை, மார்ச் 12: தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாடும் வகையில் நாகையில் உள்ள குருஜி அனாதை குழந்தைகள் பாதுகாப்பு இல்லத்தில் உள்ள பெண் குழந்தைகளுக்கு புத்தாடை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தலைமைச் செயற்குழு உறுப்பினர் மேகநாதன் தலைமை வகித்தார்.  நாகூர் நகர செயலாளர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார்.  நிகழ்ச்சியில் அனாதை இல்லத்தில் உள்ள 42 பெண் குழந்தைகளுக்கு நாகை தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளர் கவுதமன் புத்தாடை வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் முருகையன், தகவல் தொழில் நுட்ப அணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாரிபாலன், மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளர் அண்ணாதுரை, துணை அமைப்பாளர் தங்கதுரை மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags : children ,occasion ,birthday ,MK Stalin ,
× RELATED புது வாழ்விற்கு வழியமைத்ததிரு(புது)நாள்