×

2017 -18ம் ஆண்டிற்கான பயிர்காப்பீட்டு தொகையை உடனே விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்

சீர்காழி, மார்ச் 12: சீர்காழியில் தமிழக நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு சங்க ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மாநில அமைப்பாளர் ராஜா தலைமை வகித்தார்.  மாவட்ட செயலாளர் முத்துவேலு, மாவட்ட பொருளாளர் முனுசாமி, சீர்காழி நகர தலைவர் அன்வர் சுல்தான், சட்ட ஆலோசகர் ஜோசப், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜாராமன் முன்னிலை வகித்தனர்.    மாவட்ட துணை செயலாளர் ரமேஷ் வரவேற்றார். கூட்டத்தில் காஷ்மீரில் பாகிஸ்தான் தாக்குதலில் வீரமரணமடைந்த 42 ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

நாகை மாவட்டத்தில் 2017 - 18ம் ஆண்டில் பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு பயிர் இழப்பீட்டு தொகையை உடனே வழங்க வேண்டும்.  தமிழக அரசு மணல் குவாரியை பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் தனி வழித்தடம் ஏற்படுத்தி மணல் குவாரியை திறக்க வேண்டும்.  தமிழகத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சீர்காழி கொள்ளிட முக்கூட்டில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையால் பொதுமக்களுக்கும் வியாபாரிகளும், மாணவ, மாணவிகளும் பல்வேறு சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். டாஸ்மாக் கடையால் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.  பொது மக்களின் நலன் கருதி டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட துணை பொது செயலாளர் சுரேஷ்குமார் நன்றி கூறினார்.

Tags :
× RELATED பொறையாரில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு தேர்தல் விழிப்புணர்வு முகாம்