×

கொள்ளிடம் அருகே உடல்தானம் கூலி தொழிலாளியின் உடலை மருத்துவக் குழு எடுத்து சென்றது

கொள்ளிடம், மார்ச் 12:  நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே சிதம்பரநாதபுரம் கிராமம் பெரியத் தெருவைச் சேர்ந்தவர் ராமு(73). கூலித்தொழிலாளி. இவர் தொடர்ந்து பொதுமக்களின் சேவையில் ஈடுபட்டு வந்தார். கடந்த சில வருடங்களுக்கு முன் தனது இரண்டு கண்கள் மற்றும் உடலைத்தானம் செய்யப்போவதாக தனது மனைவி மற்றும் மகன்களுக்கு தெரிவித்தார். இறந்த பிறகு மண்ணில் அழுகி யாருக்கும் பயன்படாமல் போகும் உடலும், கண்ணும் மற்றவர்களுக்கு பயன்படும் என்பதனைத் தெரிவித்தார். இதனை இவரின் குடும்பத்தினர் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டனர். தொடர்ந்து பாண்டிச்கேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு தனது இரண்டு கண்களையும் தானம் செய்வதற்கான முழு சம்மதத்தையும் உடலை பாண்டிச்சேரி மகாத்மாகாந்தி மருத்துவனைக்கு தானம் செய்வதற்கான உறுதிமொழி பத்திரத்தில் கையெழுத்திட்டு உறுதியளித்திருந்தார்.

இந்நிலையில் கடந்த சில தினங்களாக உடல்நலம் குன்றிய நிலையில் இருந்த ராமு நேற்று முன்தினம் இரவு இறந்தார். தகவலறிந்த பாண்டிச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் மகாத்மாகாந்தி மருத்துவனையை சேர்ந்த மருத்துவக் குழுவினர் நேற்று சிதம்பரநாதபுரம் வந்து ராமுவின் இரண்டு கண்களையும் உடலையும் எடுத்து சென்றனர். கொள்ளிடம் வட்டாரத்திலேயே கண் மற்றும் உடல்தானம் செய்த முதல் மனிதர் என்ற பெயரை ராமு பெற்றுள்ளார். இவரின் இந்த தியாகத்தை அனைவரும் பாராட்டினர்.

Tags : team ,cobble ,wage worker ,
× RELATED இன்சுலின் வழங்க கோரிய மனு தள்ளுபடி...