×

கரூர் ரெட்டிபாளையம் அருகே பைக் மீது வாகனம் மோதி மூதாட்டி பலி, 2 பேர் காயம்

கரூர், மார்ச் 12: கரூர்  வெங்கமேட்டை சேர்ந்தவர் ரத்தினம்(52). தனியார் நிறுவனம் ஒன்றில்  மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று முன்தினம் மதியம்  பாலமலை கோயிலில் நடந்த உறவினர் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டு பைக்கில் கரூர்  நோக்கி புறப்பட்டார். உடன் இவரின் மனைவி கவுசல்யா(42), உறவினர் கமலம்(70) ஆகியோரும் வந்தனர். ரத்தினம் ஓட்டி வந்த  பைக், கரூர் கோவை சாலை ரெட்டிபாளையம் அருகே வந்த போது, பின்னால் வந்த  அடையாளம் தெரியாத வாகனம் பைக் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று  விட்டது. இந்த விபத்தில் பைக்கில் இருந்து மூவரும் கிழே விழுந்து  காயமடைந்தனர்.  படுகாயமடைந்த கமலம் கோவை மருத்துவமனைக்கு கொண்டு  செல்லும் வழியில் இறந்தார். ரத்தினம், கவுசல்யா ஆகிய இருவரும் கருர்  தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். இந்த விபத்து சம்பவம் குறித்து டவுன் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிக்பாக்கெட் அடிக்க முயன்ற பெண் கைது: கரூர் மாவட்டம் விசுவநாதபுரியை சேர்ந்தவர் மணிவேல்(60). இவர் நேற்று முன்தினம் மாலை கரூர் பஸ் ஸ்டாண்டில் வெளியூருக்கு செல்வதற்காக நின்று கொண்டிருந்தார்.

அப்போது அடையாளம் தெரியாத பெண் மணிவேல் வைத்திருந்த பேக்கில் இருந்து பணத்தை திருட முயன்றார். அப்பகுதியில் இருந்தவர்கள் பெண்ணை மடக்கி பிடித்து டவுன் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணையில் அவர் மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்த ராணி(52) என தெரிய வந்தது. போலீசார் அவரை கைது செய்து வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கார் மோதி லோடுமேன் பலி: ஈரோடு திண்டலை சேர்ந்தவர் அலெக்சாண்டர் மகன் அஜய் (30), இவர் காரில் குடும்பத்துடன் தூத்துக்குடிக்கு ஒரு விசேஷத்திற்கு சென்று விட்டு ஈரோட்டிற்கு காரில் திரும்பி கொண்டிருந்தார். காரை அஜய் ஓட்டி வந்தார். கரூர் திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அரவக்குறிச்சியை அடுத்த மணல்மேடு டெக்ஸ்பார்க் அருகே வேகமாக வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த மணல்மேடு டெக்ஸ்பார்க்கில் லோடுமேன் வேலை செய்யும் கருப்பணன்(50) என்பவர் மீது கார் மோதியது. படுகாயமடைந்த அவர் கரூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். அங்கு கருப்பணனை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக கூறினர். இது குறித்து அரவக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Tags : Karur ,Reddypalayam ,
× RELATED கரூரில் போக்குவரத்துக்கு இடையூறாக ரோட்டில் உலா வரும் கால்நடைகள்