×

கரூர் அரசு காலனி- வாங்கப்பாளையம் செல்லும் சாலையில் மெகா பள்ளத்தால் வாகன ஓட்டிகள் கடும் அவதி

கரூர், மார்ச் 12: கரூர் அரசு காலனி பகுதியில் இருந்து வாங்கப்பாளையம் செல்லும் பிரிவு சாலையில் உள்ள பள்ளத்தினை விரைந்து சீரமைக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரூர் மாவட்டம் அரசு காலனி சந்திப்பு பகுதியில் வாங்கப்பாளையம், கரூர் பகுதிகளுக்கும், வாங்கல் பகுதிக்கும் செல்லும் மூன்று சந்திப்பு சாலைகள் உள்ளன. இதில் அரசு காலனி பகுதியில் இருந்து வாங்கப்பாளையம் செல்லும் சாலையோர பிரிவு பகுதி கடந்த பல மாதங்களாக பள்ளமாக உள்ளது. இதனால் இரவு நேரங்களில் இரண்டு சக்கர வாகனங்களில் செல்லும் அனைவரும் பள்ளத்தில் விழுந்து செல்கின்றனர். மேலும் கார் போன்ற வாகனங்களும் இந்த பகுதியை சிரமப்பட்டுத்தான் கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.  இந்த சாலையை சீரமைத்து தர வேண்டும் என இந்த பகுதியினர் பலமுறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளதாக கூறப்படுகிறது.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பகுதியை பார்வையிட்டு சாலையில் உள்ள பள்ளத்தினை விரைந்து சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Tags : road ,Karur Government Colony ,pond ,Vadapalayam ,
× RELATED 5 ஆண்டு திட்டம் போல் ஜவ்வாய் இழுக்கும் லெனின் வீதி சாலைப்பணி