×

திருவாடானை பகுதியில் குடிதண்ணீர் தட்டுப்பாட்டை போக்க போர்வெல் அமைப்பு

திருவாடானை, மார்ச் 12: திருவாடானையில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க ரூ.23 லட்சத்தில் போர்வெல் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் வறண்டு கிடக்கும் கோயில் குளத்தையும் நிரப்ப ஏற்பாடு நடைபெற்று வருகிறது.
கோடைகாலம் வந்து விட்டாலே குடிநீர் பஞ்சம் தலைவிரித்து ஆடுவது ராமநாதபுரம் மாவட்டத்தில் வாடிக்கையாகி விட்டது. அதிலும் கடற்கரை பகுதிகள் என்றாலே பூமிக்கு அடியில் உப்பு தண்ணீர் தான் கிடைக்கிறது. இதனால் வெளியூரிலிருந்து பல குடிநீர் திட்டங்கள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டாலும் அவைகள் போதுமானதாக இல்லை. இதனால் கலெக்டரின் சிறப்பு உத்தரவின்பேரில் திருவாடானை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு பின்புறமாக சுமார் 1,400 அடி ஆழத்தில் ரூ.23 லட்சம் செலவில் போர்வெல் அமைக்கப்பட்டது. இந்த போர்வெல் மூலம் ஓரளவுக்கு நல்ல குடிதண்ணீர் கிடைத்துள்ளது. இந்த தண்ணீரை பயன்படுத்தி திருவாடானை பகுதியில் குடிநீர் பஞ்சத்தை போக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் முன்பாக உள்ள கோயில் குளம் வறண்டு கிடக்கிறது. இதனால் பக்தர்கள் நீராட முடியாமல் தவித்து வருவதையொட்டி இந்த குளத்தை, புதிய போடப்படும் போர்வெல் மூலம் குழாய்களைப் பயன்படுத்தி நிரப்புவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இதனால் பொதுமக்களும் பக்தர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags : area ,Tiruvatanai ,
× RELATED கர்நாடகாவில் வாகன சோதனையின்போது 1,200...