×

டோல்கேட்டில் இறங்கி நடக்கும் பயணிகள் மூவேந்தர் புலிப்படை கண்டன கூட்டம்

மதுரை, மார்ச் 12:  தேவேந்திரகுல வேளாளர் அரசாணையை வெளியிட காலதாமதம் ஏற்படுத்தும் தமிழக அரசை கண்டித்தும், மதுரை விமான நிலையத்திற்கு இமானுவேல் சேகரனார் பெயர் வைக்க வேண்டும், விமான நிலையத்திற்கு இடம் ெகாடுத்த மக்களுக்கு விமான நிலையத்தில் வேலை கொடுக்க வேண்டும், சுதந்திர போராட்ட வீரர் சுந்தரலிங்கனார் வாழ்க்கை வரலாற்றை பள்ளிப்பாட புத்தகத்தில் சேர்க்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் மூவேந்தர் புலிப்படை அமைப்பினர் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் செய்யப்போவதாக அறிவித்திருந்தனர். இதற்கிடையே தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு தேர்தல் விதிமுறை அமுலுக்கு வந்துவிட்டதால் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி கிடைக்கவில்லை. இதனையடுத்து மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கன்டன கூட்டம் நேற்று நடத்தினர்.   மாட்டுத்தாவணி எம்ஜிஆர் பஸ்நிலையம் எதிரே உள்ள அரங்கில் நடந்த கூட்டத்திற்கு மூவேந்தர் புலிப்படை தலைமை ஒருங்கிணைப்பாளர் பாஸ்கர் தலைமை வகித்தார். பொருளாளர் தமிழ்மாறன், அரசியல் குழு தலைவர் சந்தனதாசு முன்னிலை வகித்தனர். மக்கள் மறுமலர்ச்சி கழகத் தலைவர் முருகேசன், தலைமை ஒருங்கிணைப்பாளர் வையவன், மாநில அமைப்புச் செயலாளர் ஸ்டாலின் உள்ளிட்ட பலர் கண்டன உரையாற்றினர். மாவட்ட செயலாளர் தியாகராஜன் நன்றி கூறினார்.  

Tags : Travelers ,
× RELATED உகாண்டாவில் பயங்கரம்: 2 வெளிநாட்டு பயணிகள் சுட்டு கொலை