×

மைனர் பெண் மாயம்

தேனி, மார்ச் 12: தேனியில் 17 வயது பெண் மாயமானது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர். தேனி அருகே டொம்புச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் ராசு மகன் வேல்முருகன்(20). இவர் தனது குடும்பத்துடன் கோவையில் குடியிருந்து வருகிறார். கடந்த மாதம் 26ம் தேதி வேல்முருகன் தனது சகோதரி மகள் திருமணத்திற்காக கோவையில் இருந்து 17 வயதுடைய தனது சகோதரியுடன் டொம்புச்சேரிக்கு திருமணத்திற்கு வந்தார். அப்போது, இவர்களின் பெரியம்மாள் வீட்டிற்கு செல்வதாக கூறிச் சென்ற 17 வயதுடைய பெண் திடீரென காணாமல் போய்விட்டார். இதுகுறித்து காணாமல் போன சிறுமியின் அண்ணன் வேல்முருகன், வீரபாண்டி போலீசில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Minor ,
× RELATED புளியந்தோப்பில் முன்விரோதம் காரணமாக...