×

போஷான் அபியான் திட்டம் முதலாம் ஆண்டு நிறைவு விழா

ஒட்டன்சத்திரம், மார்ச் 12: ஒட்டன்சத்திரம் அருகே காவேரியம்மாபட்டியில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் கீழ் போஷான் அபியான் திட்டம் நிறைவுவிழா நடைபெற்றது. காவேரியம்மாபட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் நடந்த விழாவிற்கு குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் திருமகள் தலைமை வகித்தார். இதில் திண்டுக்கல் மாவட்டத்தை ஊட்டச்சத்து குறைபாடற்ற மாவட்டமாக மாற்ற உறுதிமொழி எடுக்கப்பட்டது.
விழாவில் ஊட்டச்சத்து நிறைந்த உணவு பொருட்கள் கண்காட்சி மற்றும் சைக்கிள் பேரணி நடைபெற்றது. பள்ளி ஆசிரியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், விவசாயிகள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியின் தொடக்கமாக குள்ளத்தன்மையற்ற குழந்தையை உருவாக்குவது, தாய், சேய் மரணம் ஏற்படாமல் தவிர்த்தல், வயதிற்கேற்ற உயரம், உயரத்திற்கேற்ற எடை உள்ளிட்டவை குறித்து விளக்கி கூறப்பட்டது.

Tags : Phosan Abhiyan Scheme ,
× RELATED டூவீலர் திருடிய கொத்தனார் கைது