×

ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோயிலில் பங்குனி விழா இன்று கொடியேற்றம்

வைகுண்டம், மார்ச் 12: நவதிருப்பதி கோயில்களில் 9வது தலமாகவும் குரு தலமாகவும் விளங்கும் ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோயிலில் பங்குனி உற்சவ விழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்குகிறது இதை முன்னிட்டு காலை 5 மணிக்கு விஸ்வரூபம், காலை 6 மணிக்கு திருமஞ்சனம்,   காலை 6.30 மணிக்கு கொடி பட்டம் சுற்றிவருதல், காலை 7,05மணிக்குள் மீனலக்கனத்தில் கொடியேற்றம் நடைபெறுகிறது. திருவிழா நாட்களில் சுவாமி பொலிந்தநின்றபிரான் பரங்கி நாற்காலி,சிம்ம வாகனம், அனுமார் வாகனம், சேஷவாகனம்,கருடவாகனம், யானை வாகனம், இந்திர வாகனம், குதிரை வாகனம், புன்னைமர வாகனம், மாடவீதி மற்றும் ரத வீதிகளில் வலம் வருதலும், நடக்கிறது. 16ம் தேதி இரவு பொலிந்தநின்றபிரான் கருடவாகனத்திலும் நம்ஆழ்வார் ஹம்சவாகனத்திலும் கருடசேவை நடக்கிறது. தொடர்ந்து 20ம் தேதி தேரோட்டமும்,
21ம் தேதி மிக்கவாதிபிரான் தீர்த்தவாரியும் நடக்கிறது.

Tags : festival ,
× RELATED பொற்ெகாடியம்மன் திருவிழாவுக்கு 25...