×

வேட்பாளர்கள் மீது திருப்தி இல்லையா? ‘நோட்டா’வுக்கு வாக்கு அளியுங்கள்: தேர்தல் ஆணையம் விளம்பரம்

திருவள்ளூர்: நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, தேர்தல் ஆணையம் சார்பில் பல்வேறு தலைப்புகளில் விளம்பர போஸ்டர்கள் அச்சிட்டு வெளியிடப்பட்டு உள்ளது. ஒன்றில் ‘‘போட்டியிடும் வேட்பாளர்கள் மீது திருப்தி  இல்லையா, நோட்டாவுக்கு வாக்களியுங்கள்’’ என அச்சிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்துடன், தேர்தல் கமிஷன் பல்வேறு விளம்பர போஸ்டர்களை அச்சிட்டு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர்கள், பொது இடங்கள், அரசு அலுவலகங்கள்,  வாக்குச்சாவடிகளில் ஒட்டப்படும் என கூறப்படுகிறது. இதன்மூலம் 100 சதவீதம் மக்கள் வாக்களிக்க இந்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

ஆங்கிலத்தில் அச்சிடப்பட்டுள்ள இந்த போஸ்டரில்,’போட்டியிடும் வேட்பாளர்கள் மீது திருப்தி இல்லையா, நோட்டாவுக்கு வாக்களியுங்கள்’ என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில்,  ‘நோட்டா’ பட்டன் இருக்குமிடமும் காண்பிக்கப்பட்டுள்ளது.மாற்றுத்திறனாளிகளும், சிரமமின்றி வாக்களிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதையும், தேர்தல் கண்காணிப்பு பணியில், பொதுமக்களும் பங்கு பெறலாம் என்ற தலைப்பிலும், தேர்தல் ஆணையத்தின் ‘சிவிஜில்’ ஆப்  பயன்பாடு குறித்தும் போஸ்டர்கள் உள்ளது.நமது இலக்கு, 100 சதவீதம் வாக்குப்பதிவு என்று ஒரு போஸ்டரும், ‘வாக்களிப்பதில் பெருமை கொள்வோம், இந்திய ஜனநாயகத்தில் பங்கு பெறுவோம்’ என்ற தலைப்பில், மற்றொரு போஸ்டரும் அச்சிடப்பட்டுள்ளது.

Tags :
× RELATED திருவேற்காட்டில் கூவம் கரையோர...