×

திருத்தணியில் தேர்தல் ஆலோசனை கூட்டம்

திருத்தணி: திருத்தணியில் தேர்தல் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் 27 மண்டல அலுவலர்கள் கலந்துகொண்டனர். நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 18ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட திருத்தணி சட்டமன்ற தொகுதியில் மொத்தம் 329 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.  இந்த மையங்களை 27 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு கண்காணிக்கபடவுள்ளது.

இதையொட்டி திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் அரக்கோணம் நாடாளுமன்ற உதவி தேர்தல் அலுவலர் பவனந்தி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் 329  வாக்குச்சாவடி மையங்களிலும் முழுமையாக மின்சார, குடிநீர், கழிப்பிடம், சாய்தளம் வசதிகள் மற்றும் வாக்குச்சாவடி மையங்கள் கட்டமைப்பு குறித்து உடனடியாக ஆய்வு செய்ய மண்டல அலுவலர்களுக்கு அறிவுறுத்தி  ஆலோசனைகள் வழங்கப்பட்டது. மேலும் அவர்களுக்கு தொகுதி முழுவதும் சுவர் விளம்பரங்கள், சுவரொட்டிகள், பேனர்கள் உடனடியாக அகற்றுவதற்கு உத்தரவிடப்பட்டது.

Tags : consultation ,
× RELATED வேதகிரீஸ்வரர் சித்திரை திருவிழா...