நண்பனின் திருமணத்துக்கு சென்று திரும்பியபோது பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து பெண் சாப்ட்வேர் இன்ஜினியர் பலி

செங்கல்பட்டு: சேலத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ். மறைமலைநகர் அடுத்த தைலாவரத்தில் உள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் இன்ஜினியராக வேலை பார்க்கிறார். இவரது திருமணம் நேற்று  முன்தினம் சேலத்தில் நடந்தது.இதையொட்டி அதே கம்பெனியில்
இன்ஜினியராக வேலை பார்க்கும் நண்பர்கள் கிண்டி பட்ரோட்டை சேர்ந்த சுஷ்மிதா கரண் (25), குன்றத்தூரை சேர்ந்த ஆனந்த்சுந்தர் (26), கிருஷ்ணராஜ் (26), ராம்குமார் (25), திருநின்றவூர் ஈஸ்வரன் (25) ஆகியோர் திருமண விழாவில் கலந்து கொண்டனர்.இதையடுத்து, நேற்று முன்தினம் மாலை அனைவரும் காரில் சென்னைக்கு புறப்பட்டனர். ஆனந்த்சுந்தர் காரை ஓட்டினார்.

செங்கல்பட்டு பைபாஸ்சாலையில் கார் சென்றபோது,பின்னால் வந்த வாகனம், காரை முந்தி செல்ல இதில் கார், கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து. 5 பேரும் படுகாயமடைந்தனர்.தகவலறிந்து செங்கல்பட்டு டவுன் இன்ஸ்ெபக்டர் அந்தோணி ஸ்டாலின் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, படுகாயமடைந்த 5 பேரையும் மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு சிகிச்சை பலனின்றி சுஷ்மிதா கரண் பரிதாபமாக இறந்தார்.இதைதொடர்ந்து, மேல் சிகிச்சைக்காக ஒருவர் நந்தம்பாக்ககத்தில் உள்ள தனியார் மருத்துவமனையிலும், 3 பேர் சென்னை அரசு பொது மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.  மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : engineer ,downtown ,
× RELATED சிறுமிக்கு பாலியல் தொல்லை போக்சோவில் முதியவர் கைது