×

காஞ்சிபுரத்தை அடுத்த தாமல் அருகே தண்ணீர் எடுக்க சென்றபோது மினி லாரி மோதி 2 பெண்கள் படுகாயம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த தாமல் அருகே குடிதண்ணீர் எடுக்க சென்ற பெண்கள் மீது மினி லாரி மோதியதில் 2 பெண்கள் காயமடைந்தனர். இதனைக் கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால், சென்னை -  பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்துபாதித்தது. காஞ்சிபுரம் அருகே சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தாமல் கிராமம் உள்ளது. பருவமழை பொய்த்ததால் இப்பகுதியில் தண்ணீர் பஞ்சம் தலைதூக்கியுள்ளது. அதனால் இப்பகுதியை சேர்ந்த மக்கள் அருகில் உள்ள  வயல்வெளி பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள பம்ப் செட்களில் வரும் தண்ணீரை பயன்படுத்துகின்றனர்.இந்நிலையில் நேற்று காலை தாமல் பகுதியை சேர்ந்த பவானி, லட்சுமி உள்பட சில பெண்கள், தண்ணீர் எடுக்க சென்னை - பெங்களூரு நெடுஞ்சாலையோரம் நடந்து சென்றனர். அப்போது காஞ்சிபுரத்தில் இருந்து வேலூர் நோக்கி வேகமாக சென்ற ஒரு மினிலாரி, பவானி, லட்சுமி ஆகியோர் மீது மோதிவிட்டு சென்றது.இதில் படுகாயமடைந்த பெண்கள் அலறி துடித்தனர்.

இதை பார்த்ததும், அப்பகுதி மக்கள், 2 பேரையும் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் அப்பகுதி மக்கள் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் திரண்டு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் அப்பகுதியில் சுமார் 1 மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதித்தது. தாமல் பகுதியில் இருந்து சுமார் 5 கிமீ தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. அங்கு பரபரப்பு நிலவியது.தகவலறிந்து பாலுசெட்டிசத்திரம் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு ) ராஜாங்கம் உள்பட போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று, மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார்.அப்போது, குடிநீர் பிரச்னையால்தான் இந்த சம்பவம் ஏற்பட்டுள்ளது. எனவே, குடிநீர் பிரச்னையை தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோஷமிட்டனர்.  இதனை தொடந்து அங்கு காஞ்சிபுரம் பிடிஓ உள்பட  அதிகாரிகள் அங்கு சென்று, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இரைதயடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

Tags : girls ,Kanalipuram ,Damala ,
× RELATED ஆம்புலன்சில் பிறந்த இரட்டை பெண் குழந்தைகள் சேத்துப்பட்டு அருகே