×

அனல் காற்று வீசுவதால் கரூர் வீதிகளில் மக்கள் நடமாட்டம் குறைவு..

கரூர், மார்ச் 8:  கரூர் மாவட்டத்தில் கோடை துவங்கும் முன்னரே வெயில் கொளுத்த ஆரம்பித்து விட்டது. கரூர் மாவட்டத்தில் சராசரியாக வெயில் அதிகபட்சமாக 104 டிகிரி பதிவாகி வருகிறது. வெப்பக்காற்று வீசும் மாவட்டங்களில் கரூர் மாவட்டமும் உள்ளது. இதனால் நேற்று வெயிலுடன் அனல்காற்று வீசியது. பிற்பகலில் கடைவீதிகள் மற்றும் நெடுஞ்சாலைகளில் மக்கள் நடமாட்டம் இன்றி காணப்பட்டது. வெயிலின் தாக்கத்தில் இருந்து விடுபட வெள்ளரிக்காய்களை வாங்கி சாப்பிடுகின்றனர். திருப்பூர், பொள்ளாச்சி போன்ற இடங்களில் இருந்து வெள்ளரிக்காய்கள் விற்பனைக்காக கொண்டு வந்து குவிக்கப்பட்டிருக்கிறது. ஒரு காய் ரூ.5க்கு விற்பனை செய்யப்படுகிறது. இயற்கையான சத்துக்கள் நிறைந்ததாகவும், குளிர்ச்சியைத் தருவதாகவும் இருப்பதால் பொதுமக்கள் அதிக அளவில் வெள்ளரிக்காய்களை வாங்கி சென்றனர்.

Tags : roads ,Karur ,
× RELATED 2000 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட கரும்பு அறுவடை பணிகள் தீவிரம்