×

க.பரமத்தி பகுதி சிவன் கோயில்களில் மகா சிவராத்திரி விழா

க.பரமத்தி, மார்ச் 8: க.பரமத்தி ஒன்றியத்தில் உள்ள சிவன் கோயில்களில் நடந்த மகா சிவராத்திரி விழாவில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். க.பரமத்தி ஒன்றியத்திற்குட்பட்ட 30 ஊராட்சிகளில் பிரசித்தி பெற்ற கோயில்களான புன்னம் புன்னை வன நாயகி உடனுறை புன்னைவனநாதர், பவித்திரமேடு அருகே பாலசுப்பிரமணிய சுவாமி சித்தர் சமாதி, க.பரமத்தி சவுந்தரநாயகி உடனமர் சடையீஸ்வர சுவாமி, குப்பம் குங்குமவல்லி சமேத கும்பேஸ்வரர் கோயில், மரகதவல்லி உடனுறை மரகதீஸ்வரர் கோயில், தென்னிலை சிவகாமசுந்தரி உடனமர் தேவேந்திர லிங்கேஸ்வரர் சுவாமி, சின்னதாராபுரம் முனீ முக்தீஸ்வரர், புன்னம் மற்றும் கரியாம்பட்டி அங்காள பரமேஸ்வரி, ஆரியூர் செல்லாண்டியம்மன் கோயில்களில் சிவராத்திரி விழா சிறப்பு பூஜையுடன் துவங்கியது. இதையொட்டி முதலாம் காலபூஜை, இரண்டாம் காலபூஜை,  மூன்றாம் காலபூஜை, அதிகாலை நான்காம் காலபூஜை நடத்தப்பட்டு சிவபெருமானுக்கு பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 18 வகையான மூலிகை பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து அம்பாளுக்கும் ஈஸ்வரனுக்கும் பல்வேறு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு பக்தர்கள் வழிபாடு செய்தனர். இதில் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags : Maha Shivarathri ,festival ,temples ,K. Paramati Shiva ,
× RELATED தாய்லாந்தில் தண்ணீர்...