×

தேனி கம்மவார் சங்க பொறியியல் கல்லூரியில் உள்வளாகத் தேர்வு 11 பேர் தேர்வு

தேனி, மார்ச். 8: தேனி கம்மவார் சங்க பொறியியல் கல்லூரியில் பிரபல நிறுவனங்கள் கலந்து கொண்ட உள்வளாகத் தேர்வு நடந்தது. தேனி கம்மவார் சங்க பொறியியல் கல்லூரியில் புனே, கோவை, பெருந்துறை போன்ற நகரங்களில் செயல்படும் பிரபல தனியார் நிறுவனமான டிஎம்எம் நிறுவனம் கலந்து கொண்ட உள்வளாகத் தேர்வு நடந்தது. இதில் இறுதியாண்டு பயிலும் இயந்திரவியல் துறை மாணவர்கள் கலந்து கொண்டனர். இத்தேர்வில் 11 மாணவர்கள் தேர்ச்சி பெற்று வேலைவாய்ப்புக்கான பணியாணை பெற்றனர். வேலைவாய்ப்பு பெற்ற மாணவர்களை தேனி கம்மவார் சங்க தலைவர் நம்பெருமாள், பொதுச்செயலாளர் பொன்னுச்சாமி, கல்லூரி செயலாளர் சந்திரசேகரன், கல்லூரி பொருளாளர் இளங்கோ, கல்லூரி முதல்வர் நாகரத்தினம், துணை முதல்வர் ராஜ்நாராயணன், கல்லூரி பேராசிரியர்கள், தேனி கம்மவார் சங்க நிர்வாகிகள் பாராட்டினர். உள்வளாகத் தேர்வுக்கான ஏற்பாடுகளை கல்லூரியின் மின்னியல் துறை பேராசிரியர் பொன்அருள், வேலைவாய்ப்பு அதிகாரி திருப்பதி ராஜா செய்தனர்.


Tags : Theni Kammara Sangh Engineering College ,
× RELATED இடுக்கியில் காங்கிரஸ் வெற்றி