×

நகராட்சி கட்டடங்களின் வாடகையை சீரமைக்க ேவண்டும் வணிகர் சங்க பேரமைப்பு வலியுறுத்தல்

தேனி, மார்ச் 8: நகராட்சி பகுதிகளில் உள்ள கட்டடங்களின் வாடகையை குறைக்க வேண்டும் என வணிகர்சங்க பேரமைப்பு வலியுறுத்தி உள்ளது.தேனி மாவட்ட அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாவட்ட செயற்குழு கூட்டம் தேனியில் நடந்தது. மாவட்ட தலைவர் செல்வக்குமார் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் திருவரங்கநாதன் முன்னிலை வகித்தார். மாவட்ட பொருளாளர் அருஞ்சனைக்கண்ணன் வரவேற்றார்.இக்கூட்டத்தில், உணவுபாதுகாப்புத் துறை மற்றும் ஜிஎஸ்டி சட்டங்களில் உள்ள சிறைத்தண்டனையை ரத்து செய்ய வேண்டும். சாலை விரிவாக்கத்தால் பாதிக்கப்படும் சாலையோரம் வியாபாரிகளுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும். பெரியகுளத்தில் இருந்து அடுக்கம் வழியாக கொடைக்கானலுக்கு செல்ல சாலைவிரிவாக்கம் செய்ய வேண்டும். நகராட்சி பகுதியில் கட்டிடங்களின் வாடகையை சீரமைக்க வேண்டும், அன்னிய நாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமான அனுமதி வழங்கி சிறு, குறு வணிகர்களை பாதிக்கச் செய்யும் போக்கை தவிர்க்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்கூட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags : buildings ,Merchant Society ,
× RELATED உக்ரைனில் ரஷ்யா நடத்திய ஏவுகணைத்...