×

ெசயல்விளக்க கூட்டத்தில் இயங்காத வாக்குப்பதிவு இயந்திரம்

ராமநாதபுரம், மார்ச் 8: ராமநாதபுரத்தில், வாக்குப்பதிவு மற்றும் விவிபேட் இயந்திரம் செயல்விளக்க கூட்டத்தில் இயந்திரங்கள் ெசயல்படவில்லை. இதனால் கலெக்டர் வீரராகவராவ் அதிகாரிகளை கண்டித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் விவிபேட் இயந்திரம் குறித்த செயல்விளக்க கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் வீரராகவராவ் தலைமை வகித்தார். இதில் அதிகாரிகள் மற்றும் நிருபர்கள் முன்பு செயல் விளக்கத்திற்காக வைத்திருந்த டெமோ வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் விவிபேட் இயந்திரம் இயங்கவில்லை. கலெக்டர் வீரராகராவ் மற்றும் அதிகாரிகள் நீண்ட நேரம் போராடியும் இயந்திரம் செயல்படவில்லை. இதனால் கோபமடைந்த வீரராகவராவ், ‘‘அவரவர் வேலைகளை ஒழுங்காக பார்க்க வேண்டும். மிஷின் இஸ் ஓகே. பட் தி கனெக்ஷன் இஷ் பெயிலியர் என்று தமிழிலும், ஆங்கிலத்திலும் அதிகாரிகளை சரமாரியாக வசை பாடினார். பின்னர் மாற்று இயந்திரம் வரவழைக்கப்பட்டு செயல்விளக்கம் நடந்தது. இதனால் கூட்டரங்கில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : workshop ,
× RELATED சமயபுரம், எஸ்.ஆர்.வி பள்ளியில் ஆசிரியர்களுக்கான பயிற்சி பட்டறை