×

மீன் வளர்ப்போருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி

தர்மபுரி, மார்ச் 8: தர்மபுரி மீன் வளத்துறை உதவி இயக்குநர் அலுவலகம் சார்பில், மீன் வளர்ப்போருக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் 3 நாள் நடந்தது. இந்த முகாமில் 50 பேர் பங்கேற்றனர். மீன்வளத்துறை உதவி இயக்குநர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். உதவி பேராசிரியர் பால்பாண்டியன், ஆய்வாளர் ஜெயஸ்ரீ, சார் ஆய்வாளர் அசினாபானு ஆகியோர் மீன் வளர்ப்பு குறித்து பயிற்சி அளித்தனர். முகாமில், ஒகேனக்கல் மீன் வளர்ப்பு பண்ணைக்கு அழைத்து சென்று, களப்பயிற்சி வழங்கப்பட்டது. மேலும், பயிற்சியில் பங்கேற்ற அனைவருக்கும் நாளொன்றுக்கு ஊக்கத்தொகையாக தலா ₹300 மற்றும் பயணக்கட்டணமாக 3 நாட்களுக்கு சேர்த்து ₹100 மற்றும் பயிற்சி கையேடுகள் வழங்கப்பட்டது.

Tags : fish breeders ,
× RELATED தடை செய்யப்பட்ட மீன்கள் வளர்ப்போர் மீது நடவடிக்கை கோவை கலெக்டர் உத்தரவு