×

காரிமங்கலத்தில் கழிவுநீர் தேக்கத்தால் தொற்று ேநாய் அபாயம்

காரிமங்கலம் , மார்ச் 8:  காரிமங்கலம் ேபரூராட்சியில் கழிவுநீர் தேங்கி நிற்பதால், தொற்று ேநாய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. காரிமங்கலம் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில், பல வார்டுகளில் கழிவுநீர் செல்வதற்கு சாக்கடை கால்வாய்கள் இல்லாததால், கழிவுநீர் வெளியேற வழியின்றி, ஆங்காங்கே சாலையோரத்தில் தேங்கி உள்ளது. இது குறித்து பலமுறை பேரூராட்சி நிர்வாகத்திற்கு மக்கள் புகார் தெரிவித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் கிருஷ்ணகிரி சாலையில், பிடிஓ அலுவலகம் அருகே சுற்றியுள்ள குடியிருப்பு பகுதிகளில் சேகரமாகும் கழிவுநீர் செல்ல கால்வாய் வசதி இல்லாமல், அப்பகுதியில் குளம் போல் தேங்கியுள்ளது.

இதனால், துர்நாற்றம் வீசுவதோடு, கொசுத்தொல்லை அதிகரித்து அப்பகுதியில் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மேலும், பேரூராட்சிக்கு உட்பட்ட கடைவீதி சாலையின் இருபுறங்களிலும், வணிக நிறுவனங்கள் சாக்கடையை ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டியுள்ளனர். எனவே, தேங்கியுள்ள கழிவுநீரை அகற்றவும், சாக்கடை கால்வாய் வசதி ஏற்படுத்தவும் பேரூராட்சி நிர்வாகம் விரைவில் நடவடிக்கை எடுக்க ேவண்டும் என பொதுமக்கள் ேகாரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : sewage storm ,rock shelter ,
× RELATED பாதாள சாக்கடை அடைப்பால் பஸ் நிறுத்த...