×

வில்லிசேரியில் ரூ.65 லட்சத்தில் சாலை பணிகள்

கோவில்பட்டி, மார்ச் 8:  வில்லிசேரியில் ரூ.65 லட்சம் மதிப்பீட்டில் புதிய தார் சாலை பணிகளை அமைச்சர் கடம்பூர் ராஜூ துவக்கி வைத்தார். கோவில்பட்டி அருகே வில்லிசேரியில் புதிதாக தார் சாலைகள் அமைக்கும் பணிகளுக்கான துவக்க விழா நடந்தது. மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை வகித்தார். வில்லிசேரி விலக்கு தேசிய நெடுஞ்சாலையில் இருந்து கிருஷ்ணா நகர் வரை ரூ.36.30 லட்சம் செலவிலும், வில்லிசேரி ஆதிதிராவிடர் காலனியில் ரூ.24 லட்சம் செலவிலும், நடுக்காலனி தெருவில் ரூ.5.50 லட்சம் செலவிலும் என மொத்தம் ரூ.65.80 லட்சம் செலவில் புதிய தார் சாலைகள் அமைக்கும் பணிகளை அமைச்சர் கடம்பூர் ராஜூ துவக்கி வைத்தார். இதில் கோவில்பட்டி நகர அதிமுக செயலாளர் விஜயபாண்டியன், ஒன்றிய செயலாளர் அய்யாத்துரை பாண்டியன், பாலமுருகன், குமார், அலங்காரப்பாண்டியன், வேலுமணி, ரமேஷ், ராமச்சந்திரன், அன்புராஜ், மகேஸ்குமார், அருணாசலசாமி, ஆபிரகாம் அய்யாத்துரை உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Road ,Villarisseri ,
× RELATED 5 ஆண்டு திட்டம் போல் ஜவ்வாய் இழுக்கும் லெனின் வீதி சாலைப்பணி