×

லாரி மீது கார் மோதி தொழிலாளி பலி

எட்டயபுரம், மார்ச் 8:  தூத்துக்குடி புதிய துறைமுகம் பகுதியை சேர்ந்தவர் முத்துஇருளப்பன் மகன் இருளாண்டி (50). தொழிலாளியான இவர், நேற்று குடும்பத்தினருடன் மதுரை பாண்டி கோயிலில் தரிசனம் செய்துவிட்டு காரில் தூத்துக்குடிக்கு திரும்பினார். எட்டயபுரம் அடுத்துள்ள வெம்பூர் அருகே வரும்போது முன்னால் சென்ற லாரி மீது எதிர்பாராதவிதமாக கார் மோதியது. இதில் இருளாண்டி, சம்பவ இடத்திேலயே இறந்தார். காரை ஓட்டி வந்த இருளாண்டி மகன் நவநீதகிருஷ்ணன் உள்பட 6 பேர் படுகாயமடைந்தனர். இவர்கள் 6 பேரும் சிகிச்சைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.  விபத்து குறித்து மாசார்பட்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Car collision worker ,
× RELATED இளைஞர் இயக்கம் கோரிக்கை பைக் மீது கார் மோதல் தொழிலாளி பலி