×

மானிய விலையில் 2,084 பெண்களுக்கு டூவீலர் வழங்கல் அமைச்சர் தகவல்

புதுக்கோட்டை, மார்ச்8: புதுக்கோட்டை மாவட்டத்தில் மகளிருக்கு மானிய விலையில் 2,084 பேருக்கு இருசக்கர வாகனம் வழங்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். புதுக்கோட்டை  புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள பூமாலை வணிக வளா கத்தில் தமிழ்நாடு  மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில்  மகளிருக்கு மானிய விலையில் இரு  சக்கர வாகனங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கலெக்டர் உமாமகேஸ்வரி தலைமை வகித்தார். எம்.பி செந்தில்நாதன் முன்னிலை  வகித்தார். சுகாதாரத்துறை அமைச்சர்  விஜயபாஸ்கர் கலந்துகொண்டு இருசக்கர வாகனங் களை பயனாளிகளுக்கு வழங்கி  பேசியதாவது: இத்திட்டத்தின்கீழ் கணவரால் கைவிடப்பட்ட வர்கள், ஆதரவற்ற விதவை, ஏழை மகளிரை  குடும்ப தலைவியாக கொண்ட குடும்ப ங்கள், திருநங்கைகள் என்று பல்வேறு வகையில்  முன்னுரிமை படுத்தப் பட்டு இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் 2,334 பேருக்கு இருசக்கர வாகனங்கள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் இதுவரை 2,084   எண்ணிக்கையில் இருசக்கர வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளது. இதில் 1,168  வாகனங்களுக்கு ரூ.2.92 கோடி மதிப்பீட்டில் மானிய தொகை வழங்கப் பட்டு ள்ளது என்றார்.

Tags : Douglas Devananda ,
× RELATED அரசின் இருசக்கர வாகனம் பெற தகுதியுடைய மகளிருக்கு அழைப்பு